பட்ஜெட்ல இப்படி ஒரு ஸ்பெஷல் எடிஷன் போனா? அடேங்கப்பா தாறுமாறு அம்சம்.. புது POCO விலை என்ன?
திடீரென இந்திய பயனர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த போகோ (POCO) நிறுவனம், போகோ இந்தியாவின் தலைவர் ஹிமான்ஷு டாண்டன் வெளியிட்ட அறிவிப்பு படி, வரும் ஜூலை 26, 2024 ஆம் தேதி முதல் போகோ பிராண்டின் லேட்டஸ்ட் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலான போகோ எஃப்6 டெட்பூல் ஸ்பெஷல் எடிஷன் (POCO F6 Deadpool Special Edition Smartphone) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெளியான டெட்பூல் மற்றும் வால்வரின் திரைப்படத்தை கருத்தாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
POCO F6 டெட்பூல் எடிஷன் (POCO F6 Deadpool Edition) ஸ்மார்ட்போன் சாதனத்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்டது போலவே, டெட்பூல் & வால்வரின் திரைப்படம் வெளிவருவதை ஒட்டி அறிமுகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய POCO F6 டெட்பூல் எடிஷன் (POCO F6 Deadpool Edition) ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 26 ஆம் தேதி (நாளை), அறிமுகம் செய்யப்படுகிறது.

POCO F6 டெட்பூல் எடிஷன் (POCO F6 Deadpool Edition):
டெட்பூல் & வால்வரின் திரைப் படத்தின் பிரீமியர் அன்று வெளியிடப்பட உள்ளது. போகோ வழியாக இணையத்தில் வெளியான லீக் தகவலில் இடம்பெற்றுள்ள போகோ எஃப்6 டெட்பூல் ஸ்பெஷல் எடிஷன் (POCO F6 Deadpool Special Edition Smartphone) படங்கள் ஒரு பெரிய மஞ்சள் பெட்டி மற்றும் டெட்பூல் மற்றும் வால்வரின் படங்களைக் கொண்ட சிவப்பு நிற ஸ்மார்ட்போனை வெளிப்படுத்துகிறது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனமானது டெட்பூல் கேஸ் மற்றும் லோகோவை ஃபிளாஷ் மீது காட்டுகிறது. இது 'POCO ஸ்பெஷல் லிமிடெட் எடிஷன்' (POCO Special Limited Edition) என லேபிளிடப்பட்டுள்ளது. இது
ஒரு ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் சாதனம் என்பதனால், இந்தியாவில் இது வெளியானவுடன் குறைந்த அளவில் மட்டுமே கிடைக்கும் என்று முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது.
POCO F6 சிறப்பம்சம்:
POCO F6 ஆனது 6.67" இன்ச் 1.5K கிரிஸ்டல்ரெஸ் ஃபிளாவ் (CrystalRes Flow) கொண்ட 120Hz AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது துடிப்பான டிஸ்பிளேவை உறுதி செய்கிறது. இது ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 சிப்செட் (Snapdragon 8s Gen 3 SoC) இல் இயங்குகிறது. இது வலுவான செயல்திறனை வழங்குகிறது. இந்த போனில் 4800மிமீ² அளவுள்ள அல்ட்ரா-லார்ஜ் ஐஸ்லூப் கூலிங் சிஸ்டம், 12ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் உடன் வருகிறது.
POCO F6 டெட்பூல் எடிஷன் விலை (POCO F6 Deadpool Edition Price):
இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஐபி64 மதிப்பீடுகளை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Xiaomi HyperOS இல் இயங்கும். POCO F6 ஆனது 50MP Sony IMX882 சென்சார் f/1.59 துளை மற்றும் தெளிவான புகைப்படங்களுக்கு OIS ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது 8MP அல்ட்ரா-வைட் கேமரா, 20MP முன் கேமரா மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் கணிசமான 5000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த வாரத்தின் பிற்பகுதியில் தொலைபேசி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் போது விலைத் தகவல் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும். இது பட்ஜெட் செக்மென்ட் விலை கீழ் இந்தியாவில் விற்பனைக்கு வெளிவரும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications








