ஃபயரு பட்ஜெட்.. மே.29 மிரளும்.. SONY கேமரா.. 90W சார்ஜிங்.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
சோனி சென்சார் கொண்ட 50 எம்பி கேமரா, டால்பி விஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 90W சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், சியோமி ஹைபர்ஓஎஸ் போன்ற அம்சங்களுடன் போகோ எப்6 5ஜி (POCO F6 5G) வெளியாகி மார்கெட்டை அதிரவிட்டுள்ளது.
போகோ எப்6 5ஜி அம்சங்கள் (POCO F6 5G Specifications): இந்த போகோவில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ் 822 (Sony IMX-822) சென்சார், ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.

ஓம்னிவிஷன் ஓவி20பி (OmniVision OV20B) சென்சார் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 20 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த போகோ எப்6 5ஜி போனில் 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.
அதுமட்டுமல்லாமல், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision), டிசி டிம்மிங் (DC Dimming) சப்போர்ட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) வருகிறது.
ஆகவே, டிஸ்பிளேவில் அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த போகோ எப்6 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) வருகிறது. பட்ஜெட்டைவிட கூடுதல் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப் உள்ளது.

அதேபோல மிட்-ரேஞ்ச் கேமிங் பிரியர்களுக்கான அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கிறது.
கேமரா, டிஸ்பிளே, சிப்செட் போலவே பேட்டரி சிஸ்டமும் மிட்-பிரீமியமாகவே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போகோ எப்6 5ஜி போனில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஹை-ரெஸ் ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது.
IP64 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், டைப்-டி ஆடியோ, டூயல் நானோ சிம் சிலாட், அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர் சென்சார் மற்றும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டி வருகிறது. 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.29,999ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.31,999ஆக இருக்கிறது.
மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.33,999ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையாக ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.2000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. பிளாக் மற்றும் டைட்டானியம் கலர்களில் மே 29ஆம் தேதி முதல் ஆர்டர் செய்துகொள்ளலாம். பிளிப்கார்டில் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








