ஜூலை 1 குள்ள ஆர்டர் தெறிக்குமே.. பலே POCO போன் மீது ரூ.8000 விலை குறைப்பு.. என்ன மாடல்?
ஜூலை 1 ஆம் தேதி முதல் என்கிற விற்பனை தேதியோடு.. போக்கோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக போக்கோ எப்7 5ஜி (POCO F7 5G) மாடல் இந்தியாவில் அறிமுகமான வேகத்தில், பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் ஆனது போக்கோ எப்6 5ஜி (POCO F6 5G) மாடல் மீது பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது.
நினைவூட்டும் வண்ணம் போக்கோ எப்6 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கும், 12GB ரேம் + 256GB ஆப்ஷன் ரூ.31,999 க்கும் மற்றும் 12GB ரேம் + 512GB ஆப்ஷன் ரூ.33,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில், போக்கோ எப்6 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது அசல் அறிமுக விலையை விட ரூ.8,000 நேரடி தள்ளுபடி / விலை குறைப்பை பெற்று உள்ளது.
புதிய போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை பேஸிக் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கும், 12GB ரேம் + 512GB ஆப்ஷன் ரூ.33,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி ஜூலை 1 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக சைபர் சில்வர் எடிஷன், ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் பேண்டம் பிளாக் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும்.

போக்கோ எஃப்6 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே
- ஆக்டா-கோர் 4nm ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50-மெகாபிக்சல் 1/1.9-இன்ச் Sony IMX882 சென்சார்
- 8-மெகாபிக்சல் Sony IMX355 அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா
- 20-மெகாபிக்சல் OV20B செல்பீ கேமரா
- IP64 ரேட்டிங்
- 90W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி
போக்கோ எஃப்7 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் FHD+ (1280 x 2772 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

இந்த பேனல் 2,560Hz வரை இன்ஸ்டன்டனேஷியஸ்டச் சாம்ப்ளிங் ரேட், 3840Hz PWM டிம்மிங் மற்றும் 3,200 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸையும் வழங்குகிறது. மேலும் இந்த டிஸ்பிளே HDR10+ ஆதரவு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பையும் பெறுகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 12GB வரை LPDDR5X RAM மற்றும் 512GB வரை UFS4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் 2.0 உடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 ஆண்டுகளுக்கு மேஜர் ஓஎஸ் மேம்படுத்தல்கள் மற்றும் 4 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது கூகுள் ஜெமினி மற்றும் சர்க்கிள் டு சர்ச் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களையும், ஏஐ நோட்ஸ், ஏஐ இன்டர்ப்ரெட்டர், ஏஐ இமேஜ் என்ஹான்ஸ்மென்ட், ஏஐ இமேஜ் எக்ஸ்பான்ஷன் மற்றும் பல ஏஐ டூல்களையும் ஆதரிக்கிறது.
கேமராவை பொறுத்தவரை போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டருடன் 50 மெகாபிக்சல் சோனி IMX882 ப்ரைமரி சென்சாரை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் ஏஐ ஆதரவுடன் கூடிய வெப்பநிலை கட்டுப்பாடு கொண்ட 3டி ஐஸ்லூப் சிஸ்டம் மற்றும் வெப்பச் சிதறலுக்கான 6,000 மிமீ சதுர வேப்பர் கூலிங் சேம்பர் ஆகியவைகளும் உள்ளன. இது வைல்ட்பூஸ்ட் ஆப்டிமைசேஷன் 3.0-ஐயும் ஆதரிக்கிறது. இது கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில்டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டமும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது (இந்தியாவில்) 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 7550mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications