64எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் புதிய POCO 5ஜி போன்.!
விவோ, மோட்டோ நிறுவனங்களுக்குப் போட்டியாக போக்கோ நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் போக்கோ நிறுவனம் 5ஜி போன்களை கூட பட்ஜட் விலையில் அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் போக்கோ நிறுவனம் விரைவில் ஒரு அசத்தலான போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதாவது போக்கோ நிறுவனம் போக்போ எப்5 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

இந்த போக்கோ எப்5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1440 x 3200 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ், டால்பி விஷன், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய போக்கோ எப்5 ப்ரோ போன் வெளிவரும்.
அதேபோல் இந்த போக்கோ எப்5 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் 1 ஜென் சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த போக்கோ எப்5 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போக்கோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எப்5 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.
குறிப்பாக 5500 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த போக்கோ எப்5 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

குறிப்பாக 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எப்5 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








