Home
Mobile

போக்கோவின் பெரிய மனசு.. பட்டையை கிளப்பும் விலையில் Poco F5 மற்றும் Poco F5 Pro!

போக்கோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல்களாக போக்கோ எஃப்5 (Poco F5) மற்றும் போக்கோ எஃப்5 ப்ரோ (Poco F5 Pro) ஸ்மார்ட்போன்கள் இன்று மாலை, அதாவது 2023 மே 9 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இன்னும் சில நேரத்தில், அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த இரண்டு போக்கோ ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்களும் (Price Details) ஐரோப்பிய மார்க்கெட் வழியாக ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி போக்கோ எஃப்5 மாடலானது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வெளியாகும்.

பட்டையை கிளப்பும் விலையில் Poco F5 மற்றும் Poco F5 Pro!

போக்கோ எஃப்5 விலை: 6ஜிபி ரேம் + 128ஜிபி உடன் வரும் போக்கோ எஃப்5 ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் ஆனது, இந்திய ருபாய் மதிப்பின்படி சுமார் ரூ.29,200 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி உடன் வரும் டாப்-எண்ட் வேரியண்ட் ஆனது தோராயமாக ரூ.35,300 க்கும் அறிமுகமாகும்.

போக்கோ எஃப்5 ப்ரோ விலை: போக்கோ எஃப்5 ப்ரோ மாடலும் கூட 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகும். 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் பேஸிக் வேரியண்ட் ஆனது சுமார் ரூ.35,300 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி உடனான டாப்-எண்ட் வேரியண்ட் ஆனது தோராயமாக ரூ. 44,100 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

மேற்கண்ட விலைகளானது போக்கோ எஃப்5 மற்றும் போக்கோ எஃப்5 ப்ரோவின் இந்திய விலைகள் எப்படி இருக்கும் என்கிற யோசனையை நமக்கு வழங்குகின்றன. இருந்தாலும் கூட இவைகள் லீக்ஸ் வழியாக கிடைத்துள்ளதால், அதை அப்படியே நம்புவதும் புத்திசாலித்தனம் அல்ல. இவ்விரு போன்களின் சரியான விலைகளை அறிய இன்னும் சில மணிநேரங்கள் காத்திருப்பது அவசியம்!

இந்நிகழ்வை லைவ் ஸ்ட்ரீம் செய்வது எப்படி? முன்னரே குறிப்பிட்டபடி, போக்கோ எப்5 சீரிஸின் (Poco F5 Series) வெளியீட்டு நிகழ்வானது இன்று (மே 9) மாலை 5:30 மணிக்கு தொடங்கும். இந்நிகழ்வு போக்கோ நிறுவனத்தின் யூட்யூப் சேனலில் (Poco YouTube Channel) நேரடியாக ஒளிபரப்பு (Live Stream) செய்யப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

போக்கோ எஃப்5 மற்றும் எஃப்5 ப்ரோவின் அம்சங்கள்: உறுதிப்படுத்திப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை போக்கோ எஃப்5 மாடலன் குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் புதிய சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 (Snapdragon 7+ Gen 2) மூலம் இயக்கப்படும் என்பதை போக்கோ இந்தியாவின் ட்விட்டர் பக்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளேவுடன் வரலாம். போக்கோ எஃப்5 ப்ரோவானது ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Snapdragon 8+ Gen 1) சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, ப்ரோ மாடலில் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் பேக் செய்யப்படலாம். முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம். கடைசியாக இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco F5 and Poco F5 Pro India Launch Today Check Expected Specifications and Price in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X