Home
Mobile

சூப்பரான 5G போன் வாங்க ரெடியா? நல்ல செய்தி சொன்ன போக்கோ.!

போக்கோ நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது. அதாவது பட்ஜெட் விலையில் தரமான கேமராக்கள், அருமையான சிப்செட், நீண்ட நேரம் பேக்கப் கொடுக்கும் பேட்டரி என் பல சிறப்பு அம்சங்களுடன் 5ஜி போன்களை பட்ஜெட்
விலையில் அறிமுகம் செய்கிறது போக்கோ நிறுவனம்.

போக்கோ எஃப்5 5ஜி

போக்கோ எஃப்5 5ஜி

இதுவரை பட்ஜெட் விலையில் அதிகமான போன்களை அறிமுகம் செய்தது போக்கோ நிறுவனம் மட்டும் தான். இந்நிலையில் போக்கோ நிறுவனம் விரைவில்போக்கோ எஃப்5 5ஜி எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

டிப்ஸ்டர் முகுல் ஷர்மா

தற்போது EEC சான்றிதழ் தளத்தில் Poco F5 5G பட்டியலிடப்பட்டதாகக் டிப்ஸ்டர் முகுல் ஷர்மா தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் 23013PC75G என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 2கே டிஸ்பிளே

2கே டிஸ்பிளே

இப்போது ஆன்லைனில் கசிந்த Poco F5 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது AMOLED 2கே டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் கண்டிப்பாக ஒரு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

1000 நிட்ஸ் ப்ரைட்னஸ்

1000 நிட்ஸ் ப்ரைட்னஸ்

குறிப்பாக 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போனின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

ஸ்னாப்டிராகன்

ஸ்னாப்டிராகன்

போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

ஆண்ட்ராய்டு 12

ஆண்ட்ராய்டு 12

அதேபோல் போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த புதிய போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலை

இந்த ஆண்டு தொடக்கத்தில் போக்கோ எஃப்4 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் விரைவில் அறிமுகமாகும் போக்கோ எஃப்5 5ஜி போனும் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco F5 5G smartphone will be Launched soon: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X