5G போனை பட்ஜெட் விலையில் வாங்க ஆசையா? வருகிறது புதிய போக்கோ போன்.!
போக்கோ நிறுவனம் புதிய போக்கோ எப்5 5ஜி எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மாடல் நம்பர்
அதேபோல் இந்த POCO F5 5G ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் 23013RK75C என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போக்கோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

2கே டிஸ்பிளே
அதாவது விரைவில் அறிமுகமாகும் போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் 2கே டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 1440 x 3200 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் சிப்செட்
அதேபோல் போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும் என்றே கூறலாம்.
மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான போக்கோ ஸ்மார்ட்போன்.

ட்ரிபிள் ரியர் கேமரா
இதுதவிர ட்ரிபிள் ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போக்கோ எப்5 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம். அதேபோல்இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

போக்கோ எஃப்4 5ஜி
போக்கோ எஃப்4 5ஜி போன் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. இதே சிப்செட் வசதி ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனில் கூட உள்ளது.குறிப்பாக Genshin Impact, Asphalt 9 கேம்களை இயக்க அருமையாக பயன்படுகிறது இந்த சிப்செட்.

360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
6.67 இன்ச் ஃபுல் HD+ (1,080x2,400 பிக்சல்கள்) E4 AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன்.

64எம்பி பிரைமரி கேமரா
போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.

4500 எம்ஏஎச் பேட்டரி
MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த போக்கோ எஃப்4 5ஜி போன். மேலும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எஃப்4 5ஜி போன். எனவே ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்ய முடியும்.
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் வி5.2 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்கள் ஆகியவை இந்த போனில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications