50எம்பி கேமரா, 5500 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் புதிய POCO 5ஜி போன்: அறிமுக தேதி இதுதான்.!
இந்த ஆண்டு தொடக்கம் முதல் பல அசத்தலான 5ஜி போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது போக்கோ நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் போக்கோ நிறுவனம் விரைவில் இந்தியாவில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது வரும் ஏப்ரல் 6-ம் தேதி இந்தியாவில் போக்கோ எப்5 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போக்கோ எப்5 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

போக்கோ எப்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் QHD+ AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த புதிய போக்கோ எப்5 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 + ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போக்கோ எப்5 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டு இந்த புதிய போன் வெளிவரும். அதேபோல் இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எப்5 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
விரைவில் அறிமுகமாகும் போக்கோ எப்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5500 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எப்5 5ஜி ஸ்மார்ட்போன்.
இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த போக்கோ எப்5 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் எண் 23013PC75I என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த போக்கோ எப்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்கோ நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான 5ஜி போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியச் சந்தையில் பட்ஜெட் விலையில் வெளிவரும் 5ஜி போன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








