மே.16 முதல்.. பிச்சிக்கிட்டு பறக்கப்போகும் இந்திய விற்பனை.. வாங்க தூண்டும் விலையில் POCO F5 5G அறிமுகம்!
சொன்னபடியே, போக்கோ (POCO) நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி போன்களாக (5G Phones) போக்கோ எஃப்5 5ஜி (POCO F5 5G) மற்றும் போக்கோ எஃப்5 ப்ரோ 5ஜி (POCO F5 Pro 5G) ஆகிய இரண்டும் உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் இந்த 2 புதிய போக்கோ போன்களில் வெண்ணிலா வேரியண்ட் (Vannila Variant) ஆன போக்கோ எஃப்5 5ஜி மாடல் மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வருகிற மே 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்கோ எஃப்5 5ஜி அம்சங்கள்: இது 120 ஹெர்ட்ஸ் வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் எச்டிஆர்10 பிளஸ் உடனான 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
குவால்காமின் புதிய சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 ப்ராசஸர் (Snapdragon 7+ Gen 2 SoC) உடன் இயங்கும் இந்த போக்கோ ஸ்மார்ட்போனில் தெர்மல் மேனேஜ்மென்ட்டிற்கான (Thermal Management) வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டமும் (Vapour Chamber Cooling System) உள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical image stabilisation - OIS) உடனான 64 மெகாபிக்சல் மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
ஐபி53-ரேட்டட் ஸ்பிளாஷ்-ரெசிஸ்டென்ட் (IP53-rated Splash-resistant ) கட்டமைப்பு, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) உடன் வரும் இந்த போக்கோ ஸ்மார்ட்போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவுடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் (Dual stereo speakers) உள்ளன.
கடைசியாக இது 67W டர்போசார்ஜிங்கிற்கான (Turbocharging) ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. (போக்கோ நிறுவனத்தின் கூற்றுப்படி) இந்த ஸ்மார்ட்போனுடன் வரும் சார்ஜர் (Bundled charger) ஆனது வெறும் 45 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும்.
போக்கோ எஃப்5 5ஜி விலை விவரங்கள்: போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போனானது மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் பேஸிக் வேரியண்ட் ரூ.29,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஹா-எண்ட் வேரியண்ட் ரூ.33,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் போக்கோ இந்தியா அறிவித்துள்ள அறிமுக சலுகையின் (Introductory offer) கீழ் போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.26,999 மற்றும் 12ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.30,999 என்கிற சிறப்பு விலையின் (Special Price) கீழ் வாங்க கிடைக்கும்.
போக்கோவின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கார்பன் பிளாக் (Carbon Black), எலக்ட்ரிக் ப்ளூ (Electric Blue) மற்றும் ஸ்னோஸ்டார்ம் ஒயிட் (Snowstorm White) என்கிற 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் வருகிற மே 16 ஆம் தேதியன்று பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








