Home
Mobile

இத்தனையுமா?- 120W ஃபாஸ்ட்சார்ஜிங், ஷோல்டர் பட்டன், லிக்யூட் கூல் டெக்னாலஜி உடன் போக்கோ எஃப்4 ஜிடி!

போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி வசதி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு தொடங்கப்பட்டுள்ளது. இந்த போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போனானது வலது புறத்தில் பாப்-அப் பட்டன்களுடன் வருகிறது. இது கேம் விளையாடுபவர்களுக்கு சிறந்த அம்சமாக இருக்கும். போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போனானது மூன்று வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போன்

போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போன்

போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போன் கடந்த செவ்வாய்கிழமை உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே50 கேமிங் எடிஷன் ஸ்மார்ட்போனி மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி வசதியோடு லிக்யூட் கூல் டெக்னாலஜி உதவியுடன் அபெக்ஸ் செயல்திறனை கொண்டிருக்கிறது. இது ஹார்ட்கோர் கேமிங் ப்ரீமியம சாதனமாக விற்பனை செய்யப்படுகிறது. இது ஸ்மார்ட்போனானது சூப்பர் என்ஜின் சூப்பர் வைட் பேண்ட் எக்ஸ் ஆக்சிஸ் மோட்டார் மற்றும் நான்கு ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது.

போக்கோ எஃப்4 ஜிடி விலை மற்றும் கிடைக்கும் தன்மை

போக்கோ எஃப்4 ஜிடி விலை மற்றும் கிடைக்கும் தன்மை

போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போனானது 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.49,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.57,100 ஆக இருக்கிறது. சலுகை விலையில் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ரூ.40,800 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.49,000 ஆகவும் இருக்கிறது. சைபர் யெல்லோ, நைட் சில்வர் மற்றும் ஸ்டீஸ்த் பிளாக் வண்ண விருப்பங்களோடு வருகிறது.

போக்கோ எஃப்4 ஜிடி சிறப்பம்சங்கள்

போக்கோ எஃப்4 ஜிடி சிறப்பம்சங்கள்

போக்கோ எஃப்4 ஜிடி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான எம்ஐயூஐ 13 ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் போக்கோ ஆதரவுப்படி 480 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதத்தைக் கொண்டிருக்கிறது. இது ஏ+ மதிப்பீட்டு ஆதரவோடு வருகிறது. போக்கோ எஃப்4 ஜிடி சாதனம் லிக்யூட் கூல் டெக்னாலஜி உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி ஆதரவைக் கொண்டிருக்கிறது. போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் வசதியோடு வருகிறது.

மூன்று பின்புற கேமரா அமைப்பு

மூன்று பின்புற கேமரா அமைப்பு

போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போனானது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 64 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 686 முதன்மை சென்சார் வசதியைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 8 மெகாபிக்சல் ஆதரவு மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் வசதியைக் கொண்டருக்கிறது. சாதனத்தில் புகைப்படங்கள் எடுக்கும் போது இது மிகவும் கிளியர் புகைப்படங்களை எடுக்க ஆதரிக்கிறது. மேலும் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுகளுக்கு என 20 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்596 கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போனின் கேமரா விருப்பங்கள்

போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போனின் கேமரா விருப்பங்கள்

போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போனின் கேமரா விருப்பங்களில் ஆர்ஜிபி விளக்கு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்த போனை சார்ஜ் செய்யும் போது அறிவிப்புகளை காட்டுவதற்கு இது ஒளிரும் என்பது குறிப்பிடத்தக்கது. போக்கோ ஸ்மார்ட்போனில் டிரிபிள் மைக்ரோஃபோன் அம்சங்கள் உடன் டிரிபிள் மைக்ரோஃபோன் அமைப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்கோ எஃப்4 ஜிடி ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு பக்கவாட்டில் பொறுத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் 4700 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும். 17 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

Best Mobiles in India

English summary
Poco F4 GT Smartphone Launched With 120W Fast Charging, Liquid Cool Technology and More: Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X