Home
Mobile

ஜூன் 23: நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த Poco F4 5G அறிமுகம்.! முழு விவரம்.!

போக்கோ நிறுவனம் வரும் ஜூன் 23-ம் தேதி புதிய போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. ஜூன் 23-ம் தேதி மாலை 5.30 மணிக்கு போக்கோ எ4 5ஜி வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளதாக போக்கோ நிறுவனம் கூறியுள்ளது.

சமீபத்தில் வெளிவந்த டீசர்

சமீபத்தில் வெளிவந்த டீசர்

போக்கோ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட டீசரில், இந்த போனில் IP53 ரேட்டிங்,மூன்று பின்புற கேமராக்கள் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஏற்கனவே போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும். பின்பு 1080 பிக்சல் தீர்மானம்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் போன்ற அம்சங்களுடன் வெளிவரும். வீடியோ பார்ப்பதற்கும், கேம் விளையாடவும் இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாக பயன்படும்.

கார்னிங் கொரில்லா கிளாஸ்

கார்னிங் கொரில்லா கிளாஸ்

பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது போக்கோ நிறுவனம். அதன்படி கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவைக் கொண்டு இந்த போக்கோ எப்4 5ஜிஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் கேமிங் பயனர்கள் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்

இந்த சிப்செட் ஆனது கேமிங் ஆப், எடிட்டிங் ஆப் போன்ற அனைத்திற்கு மிக அருமையாக பயன்படும். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் தடையில்லாமல்ஆப்களை பயன்படுத்த உதவும் இந்த தரமான ஸ்னாப்டிராகன் 870 சிப்செட். அதேபோல் MIUI 13 சார்ந்தஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாககொண்டு வெளிவரும் போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போன்.

பின்புறம் மொத்தம் மூன்று கேமராக்கள்

பின்புறம் மொத்தம் மூன்று கேமராக்கள்

போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. குறிப்பாக இயற்கை சார்ந்த படங்களை அருமையாக எடுக்க உதவும் இந்த புதிய போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றம் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளதுபோக்கோ எப்4 5ஜி.

எடை மிகவும் குறைவு

எடை மிகவும் குறைவு

போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருப்பதாக கூறப்படுகிறது. பின்பு மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் இந்த சாதனத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சாதனத்தின் எடை மிகவும் குறைவு என்றுகூறப்படுகிறது.

67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

குறிப்பாக ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விட சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் இந்த போக்கோ எப்4 ஸ்மார்ட்போன். அதேபோல் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியுடன் இந்த போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.எனவே இந்த சாதனத்தை விரைவில் சார்ஜ் செய்ய முடியும்.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்

பொதுவாக பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அதே இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் இந்த அட்டகாசமான போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது புதிய போக்கோ எப்4 5ஜி.

ஜூன் 23-ம் தேதி வரை காத்திருக்கவும்

ஜூன் 23-ம் தேதி வரை காத்திருக்கவும்

இந்தியாவில் போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.27,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் ஒரு சிறந்த கேமிங் ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால் வரும் ஜூன் 23-ம் தேதி வரை காத்திருக்கவும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco F4 5G with 64 Mega Pixel Camera Launching in India on June 23: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X