புதிய ஸ்மார்ட்போன் வாங்கப் போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.,விரைவில் வருது ஒரு சூப்பர் போன்.!

|

போக்கோ நிறுவனம் தனது புதிய அதிநவீன ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்நிறுவனம் போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக தரமான சிப்செட், அசத்தலான கேமராக்கள் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஆன்லைனில் கசிந்த தகவல்

ஆன்லைனில் கசிந்த தகவல்

மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது விரைவில் அறிமுகமாகும் போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும். பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுஇந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ரோலக்ஸ்க்கு ரோலக்ஸ்- ரூ.47 லட்சம் மதிப்புள்ள சொந்த ரோலக்ஸ் வாட்சை பரிசளித்த கமல்: சூர்யா சொன்ன பதில்!ரோலக்ஸ்க்கு ரோலக்ஸ்- ரூ.47 லட்சம் மதிப்புள்ள சொந்த ரோலக்ஸ் வாட்சை பரிசளித்த கமல்: சூர்யா சொன்ன பதில்!

தரமான சிப்செட் வசதி

தரமான சிப்செட் வசதி

குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். பின்பு மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த சிப்செட் ஆனது கேமிங் ஆப், எடிட்டிங் ஆப் போன்ற அனைத்திற்கு மிக அருமையாக பயன்படும். தடையில்லாமல் ஆப்களைபயன்படுத்த உதவும் இந்த தரமான சிப்செட்.

Jio சைலன்ட்டாக அமல்படுத்திய விலை உயர்வு: ரூ.150 அதிகரித்த திட்டம்.. நன்மையில் மாற்றம் உள்ளதா?Jio சைலன்ட்டாக அமல்படுத்திய விலை உயர்வு: ரூ.150 அதிகரித்த திட்டம்.. நன்மையில் மாற்றம் உள்ளதா?

அசத்தலான கேமரா வசதி

அசத்தலான கேமரா வசதி

அதேபோல் இந்த புதிய போக்கோ எப்4 ஸ்மார்ட்போன் ஆனது MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. எனவே துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். குறிப்பாக கேமரா அம்சங்களில் அதிக கவனம் செலுத்துகிறது போக்கோ நிறுவனம். சிறந்த கேமராவசதியை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும். அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த ஐரோப்பா சட்டம்.. 2024 இல் USB-C போர்ட் மட்டும் தான் அலோவ்ட்..ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த ஐரோப்பா சட்டம்.. 2024 இல் USB-C போர்ட் மட்டும் தான் அலோவ்ட்..

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

இந்த புதிய போக்கோ எப்4 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருப்பதாக கூறப்படுகிறது. பின்பு மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் இந்த சாதனத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உஷார்- உஷார்- "பப்ஜி மோகம்" தாயை சுட்டுக் கொன்ற 16 வயது மகன்- சடலத்தை வீட்டில் பதுக்கி தந்தையிடம் கட்டிய கதை!

பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்

பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்

போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4500 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே சிறிது நேரங்களில் இந்த ஸ்மார்ட்போனை முழு சார்ஜ் செய்ய முடியும். பின்பு கைரேகை சென்சார் வசதி உட்பட பல சென்சார் ஆதரவுகளுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இலவசமாக YouTube Premium சந்தா வேண்டுமா? அப்போ 'இதை' உடனே செய்யுங்கள்.. ஆனா..ஒரு சின்ன பிடிப்பிருக்கு..இலவசமாக YouTube Premium சந்தா வேண்டுமா? அப்போ 'இதை' உடனே செய்யுங்கள்.. ஆனா..ஒரு சின்ன பிடிப்பிருக்கு..

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும். பின்பு இந்த சாதனம் சற்று
உயர்வான விலையில் வெளிவரும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Poco F4 5G smartphone will be launched soon in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X