Home
Mobile

ஜூலை 23: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமாகும் போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன்.!

போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜூலை 23-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது
ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

குறிப்பாக 10-bit AMOLED டிஸ்பிளே

குறிப்பாக 10-bit AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

க்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனில்

இந்த புதிய போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது.எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவரும்.

256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

குறிப்பாக போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் இந்த அசத்தலான சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

64எம்பி பிரைமரி லென்ஸ்

போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தமாக மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎஎச் பேட்டரி

போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த புதிய சாதனம் வெளிவரும்.

 ஆடியோஜாக் உ

4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்டபல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Poco F3 GT with 64 Mega Pixel Camera Launching in India on July 23: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X