தரமான டிஸ்பிளேவுடன் களமிறங்கும் போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன்.!
போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக 10-bit AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

போக்கோ எஃப்3 ஜிடி
போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தமாக மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக ஒன்பிளஸ் நோர்ட் 2 அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 2
அதாவது ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்ப வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 மாடலின் பின்புறம் 50எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன்.

போக்கோ எஃப்3 ஜிடி மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன்கள் தனித்தவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன்கள் அதிக எதிர்பார்ப்புகளைஉருவாக்கியுள்ளன.


Click it and Unblock the Notifications