விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன்.!
போக்கோ நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது, அந்த வரிசையில் புதிய போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக போக்கோ எஃப்3 ஜிடி மாடல் பட்ஜெட் விலையில்
அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். வெளிவந்த தகவலின்படி, 6.67-இன்ச் OLED டிஸ்பிளே வடிவமைப்புடன் இந்த போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.
போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவரும்.

போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தமாக மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, 5065 எம்ஏஎச் பேட்டரி, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங்
உள்ளிட்ட பல முக்கியமான அம்சங்களுடன் இந்த போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் இடம்பெற்றுள்ளது. பின்பு MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி சாதனம்.

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் இந்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ, ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ்,யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications