போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனில் இப்படி ஒரு பிரச்சனையா? பயனர்கள் புகார்.!
போக்கோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருகின்றன இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள. இந்நிலையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எஃப்3 ஜிடி சாதனத்தில் சில பிரச்சனைகள் இருப்பதாக பயனர்கள் புகாரளித்துள்ளனர்.

அதாவது கேம் விளையாடும் போது இந்த போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் அதிகமாக சூடாவதாக பயனர்கள் புகாரளித்துள்ளனர். மேலும் போக்கோ நிறுவனம் இந்த சிக்கலை ஒப்புக் கொண்டுள்ளது மற்றும் விரைவில் இந்த பிரச்சனை சரிசெய்யப்படும என்று உறுதியளித்துள்ளது.

குறிப்பாக வரவிருக்கும் MIUI அப்டேட் உடன் இந்த புதிய சிக்கல் சரி செய்யப்படும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுளளது. இருந்தபோதிலும் இந்த சாதனம் சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் Turbo AMOLED10-பிட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தில் எச்டிஆர் 10 பிளஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்டபல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1200 SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவேஇயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் 4கே வீடியோ பதிவு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது போக்கோ எஃப்3 ஜிடி.

போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டு வெளிவந்துள்ளது.
மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனில் 5065 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது போக்கோ எஃப்3 ஜிடி
ஸ்மார்ட்போன். எனவே விரைவாக இந்த சாதனத்தை சார்ஜ் செய்ய முடியும். டூயல் சிம் 5ஜி, வைஃபை ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications