இன்று வெளியாகும் Poco f2 pro: விலைய கேட்ட தலைசுத்திரும்!

|

போகோ எஃப் 2 ப்ரோ மாடல் போன் இன்று வெளியாகிறது. இதன் எதிர்பார்க்கப்படும் அம்சம் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

போகோ எஃப் 2 ப்ரோ

போகோ எஃப் 2 ப்ரோ

போகோ எஃப் 2 ப்ரோ இன்று லைவ் டெலிவஸ்ட்டில் வெளியாகி வருகிறது. சியோமி துணை பிராண்ட் போக்கோவின் புதுவகை ஸ்மார்ட்போனாது ரெட்மி கே 30-ன் மறுமதிப்பாக வெளியாக வாய்ப்பிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் போகோ எஃப் 2 ப்ரோவானது போகோ எஃப் 2 தொடரின் ஒரு பகுதியாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் வரவேற்பு

பெரும் வரவேற்பு

போக்கோ எஃப் 1 அதன் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இதையடுத்து போக்கோ எஃப் 2 வெளியிட்டுக்காக அதன் வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அந்த ஸ்மார்ட்போன் இன்று வெளியாகிறது.

ஆண்ட்ராய்டு வெளியிட்டுள்ள அறிக்கை

ஆண்ட்ராய்டு வெளியிட்டுள்ள அறிக்கை

ஆண்ட்ராய்டு அறிக்கையின் படி, போகோ எஃப் 2 மே 12 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஷியோமியின் ஸ்பானிஷ் பிஆர் நிறுவனம் இந்த நிகழ்வில் பங்கேற்க ஆண்ட்ராய்டு சபைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இருப்பினும் போகோ எஃப் 2 வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

போக்கோவின் இரண்டாம் தலைமுறை

போக்கோவின் இரண்டாம் தலைமுறை

போகோவின் டுவிட்டுடன் கிண்டல் செய்தபடி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. இது போகோ எஃப் 2 ஆக இருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மற்றொரு ட்வீட்டில், போக்கோ "256 நாள் காத்திருப்பு" என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் தயாரிப்பு, அதன் அம்சங்கள், விலை அல்லது சாதனத்தின் கிடைக்கும் தன்மை பற்றிய எந்த அறிகுறியும் இல்லை. அதேபோல் #POCOisBACK! என மற்றொரு டுவிட் இருந்தது.

மிகவும் சக்திவாய்ந்த சிப்செட்

மிகவும் சக்திவாய்ந்த சிப்செட்

போகோ எஃப் 2 ப்ரோ மிகவும் சக்திவாய்ந்த சிப்செட்டுடன் வருகிறது. இந்த சிப்செட் பெரும்பாலும் ஸ்னாப்டிராகன் 865 SoC ஆக இருக்கும். இந்த சாதனம் பாப்-அப் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன, அவை நாட்ச்லெஸ் டிஸ்ப்ளேவுடன் தொடங்கப்படும். "பெரிய பேட்டரி மற்றும் வேகமான சார்ஜிங்" மற்றும் "சிறந்த கேமரா" போன்ற அம்சங்கள் குறித்த குறிப்புகள் உள்ளன. இந்த தொலைபேசி ரெட்மி கே 30 ப்ரோவைப் போன்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் ரூ. 53,000 ஆக இருக்கக்கூடும்

சுமார் ரூ. 53,000 ஆக இருக்கக்கூடும்

போர்த்துகீசிய வலைத்தளம் 4 ஜீன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, போக்கோ எஃப் 2 ப்ரோவின் விலை சுமார் ரூ. 54,000 ஆக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புடன் நிலையான பதிப்பில் வருகிறது. டாப் எண்ட் மாடலில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும். இந்த மாடலின் விலை சுமார் 62,200 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போகோ எஃப் 1 விலையுடன் ஒப்பிடும்போது இந்த விலை மிக அதிகம் என்றே தெரிவிக்கப்படுகிறது.

போகோ எஃப் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

போகோ எஃப் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

போகோ எஃப் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி கே 30 ப்ரோவின் பெயருக்குப் பிறகுதான் இந்த தொலைபேசி ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பு போல் போகோ பிராண்ட் மாறாமல் அப்படியே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று முந்தைய கசிவு தெரிவித்தது.

இன்று மாலை வெளியாக உள்ளது

இன்று மாலை வெளியாக உள்ளது

இந்த ஸ்மார்ட்போனானது இன்று மாலை வெளியாக உள்ளது. அதேபோல் இதன் 6 ஜிபி வேரியண்ட் மாடல் போனானது ரூ.53,000 எனவும் 8 ஜிபி வேரியண்ட் மாடல் போன் ரூ.62,000-க்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Poco f2 pro launch today in india expected price and specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X