தெறிக்கவிடும் சலுகையுடன் போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் விற்பனை.!
கடந்த மாதம் நடைபெற்ற பிளிப்கார்ட் இன் ஃபெஸ்டிவ் சீசன் சேல்ஸ் விற்பனையில் சியோமி போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான பல சலுகையுடன் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த மாதம் நடைபெற்ற பிளிப்கார்ட் இன் ஃபெஸ்டிவ் சீசன் சேல்ஸ் விற்பனையில் சியோமி போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான பல சலுகையுடன் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் தற்பொழுது போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் சிறப்பு சலுகையில் விற்பனை செய்யப்படுமென்று சியோமி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டிசம்பர் 6 முதல் டிசம்பர் 8 வரை
தனது டிவிட்டர் பக்கத்தில் சியோமி நிறுவனம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் சலுகை விலையில் பிளிப்கார்ட் மாற்று Mi.com வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுமென்று அறிவித்துள்ளது.

சலுகை விபரங்கள்
போக்கோ ஸ்மார்ட்போன் விற்பனை தேதியை அறிவித்துவிட்டு நிறுவனம், இன்று தனதுசலுகை விபரங்களை அறிவித்துவிட்டது. போக்கோ டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பதிவின் படி போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் பிளாஷ் சேல் விற்பனையில் விற்பனை செய்யப்படும்.

போக்கோ எப்1 | 6 ஜிபி வேரியண்ட்
போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் இன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ரூ.2000 சலுகையுடன் வெறும் ரூ.19,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

சிறப்பு சலுகை விலை
போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் இன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ரூ.2000 சலுகையுடன் வெறும் ரூ.21,999 என்ற விலையிலும் மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ரூ.5000 சலுகையுடன் வெறும் ரூ. 25,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அர்மர்டு ஸ்பெஷல் எடிஷன்
நீங்கள் வாங்கும் ஒவ்வொரு போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை சிறப்பு சலுகை வழங்கப்டுகிறதென்பது கூடுதல் சிறப்பு. போக்கோ எப்1 அர்மர்டு ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ரூ.4000 சலுகையுடன் வெறும் ரூ.26,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications