அதிரடி தள்ளுபடி: ரொம்ப மலிவு விலையில் ஸ்மார்ட்போன்கள்- போக்கோ டேஸ் விற்பனை!
பிளிப்கார்ட், அமேசானில் பல்வேறு விற்பனை தினங்கள் அறிவிக்கப்பட்டு ஏணைய சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பிளிப்கார்ட்டில் போக்கோ டேஸ் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை தினங்களில் பல்வேறு போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

போக்கோ ஸ்மார்ட்போன்கள் வாங்க சரியான நேரம்
போக்கோ எக்ஸ் 3, போக்கோ சி 3, போக்கோ எம் 2 மற்றும் போக்கோ எம் 2 ப்ரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. போக்கோ ஸ்மார்ட்போன்களை வாங்க திட்டமிட்டிருக்கும் நபர்களுக்கு இந்த அறிவிப்பு மிக பயனுள்ளதாக இருக்கும். போக்கோ விற்பனை தினங்கள் நவம்பர் 6 வரை நடக்கிறது.

போக்கோ சி3 ஸ்மார்ட்போன்
போக்கோ எக்ஸ் விலை ரூ.15,999-ல் தொடங்குகிறது. அதேபோல் போக்கோ சி3 ஸ்மார்ட்போனின் நிர்ணய விலை ரூ.9,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விலை ரூ.6,999 ஆக கிடைக்கிறது. கூடுதல் தள்ளுபடி சலுகையோடு ரூ.6,450-க்கு கிடைக்கிறது.

3ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் என இரண்டு வேரியண்ட்
போக்கோ சி3 6.53 இன்ச் எச்டி ப்ளஸ் எல்சிடி ஸ்க்ரீன் உடன் வருகிறது. இது 3ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போக்கோ சி3 மூன்று கேமரா அமைப்புடன் இருக்கிறது. இதில் 13 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது. முன்பக்கத்தில் 5 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன்
போக்கோ எம்2 ஸ்மார்ட்போனின் நிர்ணய விலை ரூ.12,999 ஆக உள்ளது. இதன் தள்ளுபடி விலை ரூ.9,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தள்ளுபடி விலையில் ரூ.9,200 ஆக கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 6 ஜிபி ரேம் மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.

போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன்
போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் நிர்ணய விலை ரூ.16,999 ஆக உள்ளது. இதன் தள்ளுபடி விலை ரூ.12,999 ஆக உள்ளது. கூடுதல் தள்ளுபடி விலை ரூ.12,400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் என்ற இரண்டு வேரியண்ட்களிலும் 5000 எம்ஏஎச் பேட்டரியுடனும் வருகிறது.

போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன்
போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் நிர்ணய விலை ரூ.19,999 ஆக இருந்தது. இதன் தள்ளுபடி விலை ரூ.15,999 ஆக உள்ளது. கூடுதல் தள்ளுபடியோடு இதன் விலை ரூ.14,300 ஆக இருக்கிறது. 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் எல்சிடி ஸ்க்ரின் டிஸ்ப்ளே, 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது.


Click it and Unblock the Notifications