இந்தாண்டின் கடைசி ஸ்மார்ட்போன்- நவம்பர் 9 உறுதி: வெளியாகும் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி!

|

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி வெளியீட்டு நிகழ்வானது நவம்பர் 8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஆனது நவம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் எனவும் இது போக்கோ எம்3 ப்ரோ 5ஜி சாதனத்தின் வாரிசாக இது வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த தகவல் கடந்த பல காலங்களாகவே வெளியாகி வருகிறது. தற்போது ஒரு நாள் முன்பு கீக்பெஞ்ச் தளத்தில் காணப்பட்டுள்ளது. இந்த சாதனம் குறித்த தகவல் பல தளங்கள் மூலமாக வெளியாகி இருக்கிறது. போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது அதன் முந்தைய சாதங்களுடன் ஒப்பிடும் போது செயலி மற்றும் கேமரா துறைகளில் மட்டும் மேம்படுத்தல்களை காணும் என கூறப்படுகிறது. போக்கோ எம்4 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 11 மாடல்களுக்கு ஒத்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி வருகை

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி வருகை

போக்கோ குளோபல் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு மூலம் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி வருகையை நிறுவனம் உறுதி செய்துள்ளது. வெளியீட்டு தேதி நவம்பர் 9 ஆம் தேதி அன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது இரவு 8 மணிக்கு நடக்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது மெய்நிகர் நிகழ்வாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. போக்கோ எம்4 ப்ரோ 5ஜி வெளியீடு ஆனது டுவிட்டர், யூடியூப் மற்றும் பேஸ்புக் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும் என கூறப்படுகிறது.

வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள்

வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள்

டீஸர் போஸ்டரில் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் குறித்த எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை. மாடல் எண் 21091116AC மற்றும் 21091116AG உடன் பல சான்றிதழ் தளங்களில் இது காணப்பட்டது. இந்த மாடல் எண் வரவருக்கும் ரெட்மி நோட் 11 மாடல் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போனும் மிகவும் ஒத்ததாக இருக்கலாம் என்பதை குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டு போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 10 5ஜி ஆகியவையின் விவரக்குறிப்புகள் ஆனது ஒரே மாதிரியாக இருந்தது.

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

எம்டி6833பி சிப் மூலம் இது இயக்கப்படலாம் என கீக்பெஞ்ச் பட்டியல் குறிப்புகள் தெரிவிக்கிறது. அதோடு இந்த சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது ஐஎம்இஐ யூரேசியன் எகனாமிக் கமிஷன் மற்றும் சீனாவின் கட்டாயச் சான்றிதழ் 3சி தளங்களில் காணப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது 21091116AC என சீன மாறுபாட்டை குறிக்கும் விதமாகவும் 21091116AG என்பது உலகளாவிய மாதிரியாக இருக்கும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்கள் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஆனது 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் மீடியா டெக் செயலி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

 இந்த ஆண்டின் கடைசி ஸ்மார்ட்போன்

இந்த ஆண்டின் கடைசி ஸ்மார்ட்போன்

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி குறித்த எந்த தகவலும் தெரியவில்லை. நிறுவனம் நவம்பர் 9 அன்று ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்பது மட்டுமே தெரிவிக்கப்படுகிறது. இதன் விவரக்குறிப்பு மற்றும் விலை குறித்த எந்த தகவலும் இல்லை. இந்த ஆண்டின் கடைசி போக்கோ ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Poco confirmed its Poco M4 Pro 5G Smartphone will be Launched on November 9th

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X