Home
Mobile

யாரு சாமி அவன்.. 7500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பட்ஜெட் விலையில் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படியான பீச்சர்களுடன் போக்கோ சி95 ப்ரோ (POCO C95 Pro) ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது. 7500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 6.9 இன்ச் பெரிய டிஸ்பிளே, 50 எம்பி கேமரா உள்ளிட்ட பல அசத்தல் அம்சங்களை கொடுத்து இருக்கிறது. இந்த போக்கோ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பெரிய பேட்டரி மற்றும் டிஸ்பிளே பிரியர்களுக்கு ஏற்ற வகையிலான பீச்சர்களுடன் இந்த போக்கோ சி95 ப்ரோ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. வெறும் 35 நிமிடங்களில் ஒரு நாள் முழுவதும் தேவைப்படும் சார்ஜை செய்து கொள்ளும்படியான பேட்டரி சிஸ்டம் கொடுக்கிறது. 6.9 இன்ச் டிஸ்பிளே கிடைப்பதால், ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ற அவுட்புட்டை இந்த போக்கோ சி95 ப்ரோ ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம்.

யாரு சாமி அவன்.. 7500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே!

போக்கோ சி95 ப்ரோ அம்சங்கள் (POCO C95 Pro Specifications): 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 825 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி91 அல்ட்ரா 12என்எம் (MediaTek Helio G91 Ultra 12nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஹைப்பர் ஓஎஸ் 3 (Hyper OS 3) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன.

இதுபோக, ரேம் எக்ஸ்டென்ஷன் மூலம் 16ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் மற்றும் மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு மூலம் 2டிபி வரை மெமரியை பயன்படுத்தி கொள்ளலாம். எல்இடி பிளாஷ் (LED Flash) உடன் 50 எம்பி மெயின் ஏஐ (AI) கேமரா + செகண்டரி கேமரா என டூயல் ரியர் செட்டப் கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி கேமரா கிடைக்கிறது.

இரண்டு நாட்களுக்கு மேல் பேக்கப் கொடுக்கும்படி 7500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், மற்ற டிவைஸ்களை சார்ஜ் செய்ய 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் (Reverse wired charging) சப்போர்ட் கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust and splash resistant) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை 169 டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,246) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை 199 டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.19,130) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ப்ளூ (Blue), பிளாக் (Black) மற்றும் கிரீன் (Green) ஆகிய 3 கலர்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். இது ஏர்லி-பேர்ட் (Early bird) விலையாக இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
POCO C95 Pro With 7500mAh Battery 50MP Camera Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X