போட்டான் பாரு POCO.. PRICE HIKE பரபரப்புக்கு மத்தியில் ரூ.12000 பட்ஜெட்ல புது போன்.. எந்த மாடல்?
குழந்தையை கிள்ளி விட்டுவிட்டு தொட்டிலையும் ஆட்டும் படியாக.. போக்கோ நிறுவனமானது இம்மாத தொடக்கத்தில் தான் அதன் போக்கோ சி சீரீஸ்-ன் அறிமுகமான 3 பட்ஜெட்-விலை மாடல்களின் விலைகளை கடுமையாக உயர்த்தி இருந்தது. இதற்கிடையில் இந்நிறுவனம் அதே சி-சீரீஸின் கீழ் ஒரு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.
அது போக்கோ சி95 ப்ரோ 4ஜி (POCO C95 Pro 4G) ஸ்மார்ட்போன் ஆகும். இன்னும் அறிவிக்கப்படாத இந்த போக்கோ ஸ்மார்ட்போன் சிங்கப்பூரின் ஐஎம்டிஏ (IMDA) சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக இதன் உலகளாவிய அறிமுகம் விரைவில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவாரசியமாக இது விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இன்னொரு ஸ்மார்ட்போன் ஆன ரெட்மி 17 4ஜி (Redmi 17 4G) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் (Rebranded) வெர்ஷனாக இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது. அதாவது ஒரே அம்சங்களுடன் வெவ்வேறு மாடல் பெயர்களின் கீழ் அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போக்கோ சி95 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்? இதில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இப்போதைக்கு இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் குறித்து லீக்ஸ் கூட வெளியாகவில்லை. ஆனால் ரெட்மி 17 4ஜி மாடலானது ரூ.12,000 - ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக போக்கோ மாடலும் அதே விலைக்கு வர வாய்ப்புள்ளது.
போக்கோ சி95 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஐஎம்டிஏ சான்றிதழ் தளம் வழியாக இது ப்ளூடூத், வைஃபை (Wi-Fi) மற்றும் என்எப்சி (NFC) உள்ளிட்ட முக்கிய இணைப்பு வசதிகளுக்கான ஆதரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 2 (Qualcomm Snapdragon 6s Gen 2) சிப்செட் மூலம் இயங்கக்கூடும்.
இந்த சிப்செட் மலிவு-விலை ஸ்மார்ட்போன்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதால், போக்கோ சி95 ப்ரோ 4ஜி மாடலானது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த சிப்செட் சோஷியல் மீடியா பயன்பாடு, இண்டர்நெட் ப்ரவுஸிங், வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் சாதாரண கேமிங் உள்ளிட்ட அன்றாட பணிகளுக்கு சீரான செயல்திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8GB ரேம் (RAM) மற்றும் 512GB சேமிப்பு (storage) வரையிலான பல்வேறு வகைகளிலும் அறிமுகமாகலாம்.
ரெட்மி ஸ்மார்ட்போன்கள் போக்கோ பிராண்டின் கீழ் மறுபெயரிடப்பட்டு வெளியிடுவது - ஷாவ்மீ நிறுவனம் கடந்த காலங்களில் பலமுறை கையாண்ட ஒரு உத்தியாகும். இதன் மூலம், சற்றே மாற்றியமைக்கப்பட்ட வடிவமைப்பு அல்லது சாஃப்ட்வேர் அனுபவத்துடன், ஏற்கனவே அறிமுகமான ஹார்ட்வேரை - போக்கோவால் வெவ்வேறு சந்தைகளுக்குக் கொண்டு வர முடிகிறது.
ஆனால் இம்முறை விலை நிர்ணயம் தான் வெற்றிக்கான மிக முக்கியமான பங்களிப்பை வழங்கும். ஏனென்றால் ஏற்கனவே பல ஸ்மார்ட்போன்கள் 2 முறை விலை உயர்த்தப்பட்டு விட்டன. நல்ல செய்தி என்னவென்றால் போக்கோ நிறுவனத்தின் சி-சீரீஸ் ஸ்மார்ட்போன் இப்போது வரை ஒரு முறை மட்டுமே விலை உயர்வை சந்தித்துள்ளது. விலை உயர்தபைட்டா போக்கோ சி85 5ஜி, போக்கோ சி81 மற்றும் போக்கோ சி81எக்ஸ் ஆகிய மாடல்களின் புதிய விலை விவரங்கள்:
போக்கோ சி85 5ஜி (POCO C85 5G):
4ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் - ரூ.14,999 இல் இருந்து ரூ.15,499 ஆக உயர்வு
6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் - ரூ.16,499 இல் இருந்து ரூ.16,999 ஆக உயர்வு
8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் - ரூ.17,999 இல் இருந்து ரூ.18,499 ஆக உயர்வு
போக்கோ சி81 (POCO C85):
4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷன் - ரூ.10,999 இல் இருந்து ரூ 11,999 ஆக உயர்வு
போக்கோ சி81எக்ஸ் (POCO C81x)
3ஜிபி ரேம் + 64ஜிபி அஸ்பாஹ்ன் - ரூ.9,999 இல் இருந்து ரூ.10,999 ஆக உயர்வு


Click it and Unblock the Notifications