Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.10499 க்கு 6300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. IP52 ரேட்டிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் அடிமட்ட பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட போகோ சி85எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை தள்ளுபடி போக தொடங்கிவிட்டது. ரூ.10,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் 6300mAh பேட்டரி, 15W பாஸ்ட் சார்ஜிங், 120Hz டிஸ்பிளே மற்றும் IP52 ரேட்டிங் கொண்ட மாடலாக இந்த போகோ சி85எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.11,999ஆகவும் இருக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.550 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.10,449 விலைக்கு வாங்கி கொள்ளலாம். அதுவே 128 ஜிபி மெமரி வேரியண்ட்டுக்கு ரூ.600 தள்ளுபடி கிடைக்கிறது.

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.10499 க்கு 6300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்!

எலைட் பிளாக் (Elite Black), கோல்டு (Sunset Gold), எம்ரால்டு கிரீன் (Emerald Green) ஆகிய கலர்களில் இந்த போகோ சி85எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். 4 ஜிபி ரேம் + 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டு உள்ளது. 1000 சார்ஜிங் சைக்கிள் அல்லது 3 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் வாரண்டி (80 சதவீத ஹெல்த்) கிடைக்கிறது.

போகோ சி85எக்ஸ் 5ஜி அம்சங்கள் (POCO C85x 5G Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி8300 6என்எம் (Octa Core Unisoc T8300 6nm) சிப்செட்டை இந்த போகோ சி85எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைத்து உள்ளது. 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. எச்பிஎம் மோடில் 810 நிட்ஸ் பிரைட்னஸ் கிடைக்கிறது. டிசி டிம்மிங் (DC Dimming) கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது.

6300mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கை இந்த போகோ சி85எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மேலும், 7.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் (Reverse Wired Charging) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.15 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் எடை கொடுக்கப்பட்டு உள்ளது. டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது,

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) உள்ளது. IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சப்போர்ட் உள்ளது. ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டுக்கு கூடுதலாக 1 சிலாட் கிடைக்கிறது. 32 எம்பி ரியர் கேமரா மற்றும் செகண்டரி சென்சார் கிடைக்கிறது.

செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி கேமராவை போகோ சி85எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 5ஜி மாடலாக இருப்பதால், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA / NSA) கனெக்டிவிட்டியை கொடுத்து உள்ளது. மேலும், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO C85x 5G With 64GB Storage 4GB RAM Available Under Rs 11000 in Flipkart Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X