Home
Mobile

தள்ளுபடியில் தெறிக்கவிடும் பிளிப்கார்ட்.. போக்கோ 5ஜி போனை வாங்க சரியான நேரம்.. 6300mAh பேட்டரி.. எந்த மாடல்?

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் அசத்தலான போக்கோ சி85எக்ஸ் 5ஜி (POCO C85x 5g) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

இப்போது பிளிப்கார்ட்டில் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ சி85எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த போனை சற்று குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

போக்கோ 5ஜி போனை வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?

போக்கோ சி85எக்ஸ் 5ஜி அம்சங்கள் (POCO C85x 5g Specifications): ஆக்டா கோர் யுனிசாக் டி8300 சிப்செட் (octa core Unisoc T8300 chipset) உடன் இந்த புதிய போக்கோ சி85எக்ஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போக்கோ போன் 6.9-இன்ச் எச்டி பிளஸ் அடாப்டிவ்சின்க் டிஸ்பிளே (AdaptiveSync display) உடன்வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720x1,600 பிக்சல்ஸ், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.

அதேபோல் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த போக்கோ சி85எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

அதுவும் HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு போக்கோ சி85எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்டபோனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்கோ சி85எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் வெளியாகி உள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

32எம்பி பிரைமரி கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் போக்கோ சி85எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது.

குறிப்பாக 6300mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 7.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுகளுடன் போக்கோ சி85எக்ஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி அதரவுகள் இந்த போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
POCO C85x 5G With 4GB RAM Available At Rs 13999 in Flipkart Big Billion Days Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X