Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. 45 சதவீத ஆஃபரில் ரூ.10499 க்கு POCO 5G போன்.. 6300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடந்துவரும் சாசா லேலே சேலில் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதத்துக்கும் அதிகமாக தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதில் போகோ சி85எக்ஸ் 5ஜி (POCO C85x 5G) ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை, பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் 45 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.11,499 விலைக்கு போகோ சி85எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க கார்டுகளுக்கு ரூ.1,050 தள்ளுபடி போக ரூ.10499 விலைக்கு வாங்கி கொள்ள கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் பேட்டரியில் பட்டையை கிளப்பி இருக்கிறது.

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. 45 சதவீத ஆஃபரில் ரூ.10499 க்கு POCO 5G போன்!

போகோ சி85எக்ஸ் 5ஜி அம்சங்கள் (POCO C85x 5G Specifications): எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 810 நிட்ஸ் எச்பிஎம் மோட் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 240 Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. டிசி டிம்மிங் (DC Dimming) வருகிறது.

சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி8300 6என்எம் (Octa Core Unisoc T8300 6nm) சிப்செட் கிடைக்கிறது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்து உள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6300mAh பேட்டரி கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டிலும் 7.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் (Reverse Wired Charging) கொடுத்துள்ளது. மேலும், ஓவர் ஹீட்டிங் கன்ட்ரோல், ஓவர் சார்ஜிங் கன்ட்ரோல் கொடுத்துள்ளது. ஆகவே, மல்டி லேயர் சேப்டி பீச்சர்களை கொடுக்கிறது. 8.15 எம்எம் தடிமன் உள்ளது. 210 கிராம் எடை கொண்ட மாடலாக இந்த போகோ சி85எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது.

32 எம்பி ரியர் கேமரா மற்றும் செகண்டரி கேமரா கிடைக்கிறது. 8 எம்பி கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. எப்/2.0 லார்ஜ் அபெர்சர் கிடைக்கிறது. மேலும், அல்ட்ரா எச்டி மோட் (Ultra HD Mode), நைட் மோட் (Night Mode) உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்துள்ளது. சியோமி ஹைப்பர் ஐலேண்ட் (Xiaomi Hyper Island) பீச்சரை இந்த போகோ சி85எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

மேலும், ஜெமினி லைவ் கிடைக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கொண்ட மாடலாக இந்த போகோ சி85எக்ஸ் 5ஜி இருக்கிறது. IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ உள்ளது.

வை-பை 802.11 ஏசி மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கிடைக்கிறது. எலைட் பிளாக் (Elite Black), கோல்டு (Sunset Gold), எம்ரால்டு கிரீன் (Emerald Green) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை பெற்று கொள்ளலாம். 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளாலம். செக்யூர் மற்றும் பீச்சர்-ரெடி சப்போர்ட் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
POCO C85x 5G Available At 45 Percent Discount on Flipkart Sasa Lele Sale 2026 Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X