Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.10,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 33W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் எப்போது இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று ஒட்டுமொத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களும் எதிர்பார்க்கும்படியான அடிமட்ட விலைக்கு போகோ சி85 (POCO C85) களமிறங்கி இருக்கிறது. ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு 6000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங் மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா போன்ற நம்ப முடியாத பீச்சர்களை கொடுக்கிறது. இந்த போகோ சி85 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

போகோ சி75 ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. வெறும் ரூ.7,999 பட்ஜெட்டில் 5160mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களுடன் வெளியானது. இதனால், அடுத்த மாடலான போகோ சி85 ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இதற்கு ஏற்ப அந்த மாடல் வெளியாகிவிட்டது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.10,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. மாடல்?

ஆனால், இந்தியாவில் கிடையாது. பிலிப்பைன்ஸ் மார்கெட்டில் அடிமட்ட விலைக்கு வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் சி75 கிடைப்பதால், அடுத்த சில வாரங்களில் இந்த போகோ சி85 மாடலும் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதனாலே, அந்த ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை பார்க்க வேண்டி இருக்கிறது.

போகோ சி85 அம்சங்கள் (POCO C85 Specifications): இந்த போகோ ஸ்மார்ட்போனின் பேட்டரி பீச்சர்களே கஸ்டமர்களை தட்டித்தூக்கும்படி இருக்கிறது. ஏனென்றால், 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது. ஆகவே, பட்ஜெட்டிலும் அதிக பேக்கப் கொண்ட மாடலாக இருக்கிறது.

அதேபோல பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81 Ultra) சிப்செட் கிடைக்கிறது. இந்த போகோ சி85 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை பார்க்கையில், 6.9 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.10,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. மாடல்?

பிலிப்பைன்ஸ் மார்கெட்டில் 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, 6 ஜிபி ரேம் + 128 ஜிரி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் களமிறங்கி இருக்கின்றன. வழக்கம்போல 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் இதிலும் கிடைக்கிறது. மைக்ரோஎஸ்டி சிலாட் எதிர்பார்க்கலாம்.

இந்த போகோ சி85 ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமராவுடன் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. யு-கட் நாட்ச் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி இருந்தும் 7.99 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

6 ஜிபி ரேம் + 128 ஜிரி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.9,612ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.11,376ஆக இருக்கிறது. இது பிலிப்பைன்ஸ் மார்கெட் விலையில் இருந்து மாற்றப்பட்டதாகும். இந்திய மார்கெட்டில் வெளியாகும்போது மாறுபடலாம். இருப்பினும், ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஏனென்றால், முந்தைய போகோ சி75 ஸ்மார்ட்போன் ரூ.7,999 பட்ஜெட்டில் கிடைத்தது. ஆகவே, இந்த போகோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.9,999 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. இந்த போகோ சி85 ஸ்மார்ட்போனில் கிரீன் (Green), பர்பிள் (Purple) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
POCO C85 With 50MP Camera 6GB RAM Launched Under Rs 10000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X