Home
Mobile

கொஞ்சம் கேப் விடுங்க Poco.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. வருகிறது புதிய போன்.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனம் நேற்று தான் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி (POCO M7 Plus 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு போக்கோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது போக்கோ நிறுவனம். அதாவது போக்கோ சி85 எனும் ஸ்மார்ட்போனை தான் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது போக்கோ நிறுவனம். தற்போது இந்த போனின் படங்கள் மற்றும் அம்சங்கள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக வரும் வாரங்களில் போக்கோ சி85 (Poco C85) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

கொஞ்சம் கேப் விடுங்க Poco .. வருகிறது புதிய போன்.. எந்த மாடல்?

போக்கோ சி85 அம்சங்கள் (Poco C85 specifications): 6.9-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் போக்கோ சி85 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்ஸ், 850 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த புதிய போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய போக்கோ சி85 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா (MediaTek Helio G81 Ultra) சிப்செட் உடன் போக்கோ சி85 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும்ஹைப்பர் ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் இந்த போக்கோ சி85 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) ஆதரவும் இந்த போக்கோ போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் (3.5mm Headphone Jack), மைக்ரோபோன் (microphone), ஸ்பீக்கர் கிரில் (speaker grills) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ போன். மேலும் போக்கோ சி85 ஸ்மார்ட்போனின் எடை 185 கிராம் ஆகும். பிளாக், பர்பிள், மின்ட் நிறங்களில் இந்த போக்கோ சி85 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது போக்கோ சி85 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் தரும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் பட்ஜெட் விலையில் போக்கோ சி85 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credit: XpertPick

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco C85 key specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X