Home
Mobile

POCO போட்டான் பாரு.. ரூ.14,725 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

6000mAh பேட்டரி கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனை பட்ஜெட்டில் வாங்க திட்டமிட்டால் தள்ளுபடி விலைக்கு கிடைக்கும் போகோ சி85 5ஜி (POCO C85 5G) மாடலை வாங்கி கொள்ளலாம். 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுத்துள்ளது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,499ஆக இருக்கிறது. இதில் இருந்து ரூ.775 தள்ளுபடியான தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,750 விலைக்கு இந்த போகோ சி85 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

POCO போட்டான் பாரு.. ரூ.14725 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்!

போகோ சி85 5ஜி அம்சங்கள் (POCO C85 5G Specifications): இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.

6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த போகோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இதுபோக 660 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 810 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், டிசி டிம்மிங் (DC Dimming) கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த பட்ஜெட்டிலும் ஃபிளிக்கர் ப்ரீ சர்டிபிகேஷன் (Flicker Free Certifications) கொண்ட மாடலாக இந்த போகோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2.2) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் இருக்கிறது.

மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி கொள்ளலாம். டூயல் நானோ சிம் சிலாட் கொடுக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்ப்பட்டு இருக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கொடுக்கப்பட்டு உள்ளது.

33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரியை கொடுத்துள்ளது. இந்த பேட்டரிக்கு 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 7.99 எம்எம் தடிமன் மற்றும் 211 கிராம் எடை கொடுத்துள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistant) கொண்ட மாடலாக இந்த போகோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) மற்றும் வை-பை 802 (Wi-Fi 802) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும், ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS) கனெக்டிவிட்டிகளும் கிடைக்கின்றன. மிஸ்டிக் பர்பிள் (Mystic Purple), ஸ்பிரிங் கிரீன் (Spring Green) மற்றும் பவர் பிளாக் (Power Black) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
POCO C85 5G With 6GB RAM Available At Discounted Price on Flipkart Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X