அடிச்சான் பாரு போக்கோ.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆண்ட்ராய்டு 15 OS.. எந்த மாடல்? என்ன விலை?
போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ சி85 5ஜி (POCO C85 5G) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் கம்மி விலையில் 6000mAh பேட்டரி, 50எம்பி கேமரா, ஐபி64 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை, விற்பனை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
போக்கோ சி85 5ஜி அம்சங்கள் (POCO C85 5G Specifications): 6.9-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்ஸ், 810 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசி டிம்மிங், TUV ரைன்லேண்ட் ப்ளூ லைட் சான்றிதழ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் பிராசஸர்(Octa Core MediaTek Dimensity 6300 6nm processor) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் உள்ளது.
ஹைப்பர் ஓஎஸ் 2.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய போக்கோ போன். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), எஃப்எம் ரேடியோ (FM Radio) உள்ளிட்ட அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் உள்ளன.
IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி வசதியும் இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

6000mAh பேட்டரி உடன் இந்த புதிய போக்கோ சி85 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 10W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இதில் உள்ளன.
விலை மற்றும் விற்பனை
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ சி85 5ஜி போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.12,999 விலையிலும், 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.14,499-ஆக உள்ளது. வரும் டிசம்பர் 16-ம் தேதி இந்த போன் பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.10,999 விலையில் வாங்கிவிட முடியும்.


Click it and Unblock the Notifications








