பிளிப்கார்ட் பிச்சிக்கும்.. பட்ஜெட்ல 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. POCO 5ஜி போன்.. எந்த மாடல்?
போகோ நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் மாடலாக போகோ சி85 5ஜி (POCO C85 5G) ஸ்மார்ட்போன் களமிறங்க இருக்கிறது. இந்திய வெளியீடு மற்றும் விற்பனை விவரங்கள் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ன. 50 எம்பி கேமரா மற்றும் பர்பிள் கலர் கொண்டுள்ள இந்த போகோ சி85 5ஜி மாடலின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் பர்பிள் கலருடன் போஸ்டர் வெளியாக இருக்கிறது. இந்த போஸ்டரை போகோ இந்தியா அதனுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. மற்ற எந்தவொரு விவரங்களையும் உறுதி செய்யவில்லை. இருப்பினும், குளோபல் மார்கெட்டில் வெளியான வெர்ஷனை போலவே டிசைன் கொடுக்கிறது.

அதாவது, குளோபல் மார்கெட்டில் அடிமட்ட விலைக்கு போகோ சி85 ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது. இதில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81 Ultra) சிப்செட் கிடைத்தது. ஆகவே, இது 4ஜி சிப்செட் மாடலாக இருப்பது தெரிகிறது. ஆனால், இந்தியாவில் இதே டிசைனில் 5ஜி சிப்செட் கொண்ட மாடலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், அதே டிசைனை போஸ்டரில் பார்க்க முடிகிறது. சிப்செட் தவிர மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, குளோபல் வேரியண்ட்டின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளலாம். இந்த வேரியண்ட் பிளாக் (Black), பர்பிள் (Purple) மற்றும் கிரீன் (Green) ஆகிய கலர்களில் வெளியாகி இருக்கிறது.
போகோ சி85 அம்சங்கள் (POCO C85 Specifications): 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 660 நிட்ஸ் பீக் பிரைடன்ஸ் கொடுக்கிறது. 810 நிட்ஸ் எச்பிஎம் மோட் மற்றும் ஃபிளிக்கர் ப்ரீ சர்டிபிகேஷன் கொண்டிருக்கிறது.
முன்பே பார்த்ததை போல இந்த போகோ சி85 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா கிடைக்கிறது. இதற்கு ஆர்ம் மாலி ஜி52 ஜிபியு (ARM Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கிறது. மேலும், இந்த போகோ சி85 ஸ்மார்ட்போனில் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) கிடைக்கிறது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு செகண்டரி லென்ஸ் கிடைக்கிறது. ஆகவே, டூயல் ரியர் செட்டப் கொடுத்துள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது.
33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரியை கொடுத்துள்ளது. இந்த பேட்டரியுடன் 7.99 மிமீ தடிமன் கொடுத்துள்ளது. மேலும், 205 கிராம் எடை கிடைக்கிறது. IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 802 மற்றும் ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டி கிடைக்கிறது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. குளோபல் மார்கெட்டில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,500 பட்ஜெட்டில் இருக்கிறது. இந்திய மார்கெட்டில் 5ஜி சிப்செட் கொண்ட மாடலாக வெளியாகினால், ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் ஆரம்ப விலை இருக்கும். ஓரிரு நாட்களில் பீச்சர்கள் மற்றும் சிப்செட் விவரங்கள் வெளியாக வாய்புள்ளது.


Click it and Unblock the Notifications








