Home
Mobile

பட்டுனு ஆர்டர் போட்ருங்க.. 50எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி.. ஆஃபரில் போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனத்தின் போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 11 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,920 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

பட்டுனு ஆர்டர் போட்ருங்க.. ஆஃபரில் போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ சி85 5ஜி அம்சங்கள் (POCO C85 5G Specifications): தரமான ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் பிராசஸர்(Octa Core MediaTek Dimensity 6300 6nm processor) உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் உள்ளது.

அதேபோல் 6.9-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்ஸ், 810 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசி டிம்மிங், TUV ரைன்லேண்ட் ப்ளூ லைட் சான்றிதழ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக ஹைப்பர் ஓஎஸ் 2.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய போக்கோ போன். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), எஃப்எம் ரேடியோ (FM Radio) உள்ளிட்ட அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

அதுவும் 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் உள்ளன.

போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி வசதியும் இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

இந்த போக்கோ சி85 5ஜி போன் 6000mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 10W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இதில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Poco C85 5G with 4GB RAM available at 11 percent discount on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X