Home
Mobile

ஒரு வேகத்துல இந்த மேட்டர் தெரியாம ரூ.10000, ரூ,15000 பட்ஜெட்ல புது POCO 4ஜி, 5ஜி போன் வாங்கிடாதீங்க.. என்னது?

கடந்த சில வாரங்களாக, பழைய மற்றும் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்திய - பல ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் வரிசையில், போக்கோவும் தனது சில சி-சீரிஸ் போன்களின் விலையை உயர்த்தியுள்ளது. இதன்கீழ் போக்கோ சி85 5ஜி, போக்கோ சி81 மற்றும் போக்கோ சி81எக்ஸ் ஆகிய மாடல்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது

விலை உயர்வுகள் (Price Hike) குறித்து சில்லறை விற்பனையாளர்களுக்கு (Retailers) தெரிவிக்கும் வகையில் போக்கோ வெளியிட்ட ஓர் ஆவணத்தின் (document) ஒரு பகுதியாக, எந்தெந்த போக்கோ சி சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலைகள் எவ்வளவு உயர்த்தப்பட்டு உள்ளது என்கிற விவரங்கள் நமக்கு கிடைத்துள்ளது.

இந்த மேட்டர் தெரியாம புது POCO போன் வாங்கிடாதீங்க.. என்னது?

நினைவூட்டும் வண்ணம் சில வாரங்களுக்கு முன்புதான், போக்கோவின் மிட்-பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் ஆன போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரிஸ் மற்றும் எம்8 ஆகியவற்றின் அனைத்து மெமரி வேரியன்ட்களின் மீதும் ரூ.3,000 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து தற்போது பட்ஜெட் விலை போக்கோ ஸ்மார்ட்போன்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன: விலை மாற்றம் செய்யப்பட்ட போக்கோ சி-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பின்வருமாறு:

போக்கோ சி85 5ஜி (POCO C85 5G):
4ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் - ரூ.14,999 இல் இருந்து ரூ.15,499 ஆக உயர்வு
6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் - ரூ.16,499 இல் இருந்து ரூ.16,999 ஆக உயர்வு
8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் - ரூ.17,999 இல் இருந்து ரூ.18,499 ஆக உயர்வு

போக்கோ சி81 (POCO C85):
4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷன் - ரூ.10,999 இல் இருந்து ரூ 11,999 ஆக உயர்வு
போகோ சி81எக்ஸ் (POCO C81x)
3ஜிபி ரேம் + 64ஜிபி அஸ்பாஹ்ன் - ரூ.9,999 இல் இருந்து ரூ.10,999 ஆக உயர்வு

முன்னரே குறிப்பிட்டபடி போக்கோ எம்8 (POCO M8) ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை இப்போது ரூ.20,999 ஆகும். இதேபோல போக்கோ எக்ஸ்8 ப்ரோவின் (POCO X8 Pro) விலை ரூ.34,999 ஆகவும், போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸின் (POCO X8 Pro Max) விலை ரூ.44,999 ஆகவும் உயர்ந்துள்ளது.

சமீபத்தில் ரியல்மி பி4 (Realme P4), ரியல்மி பி4எக்ஸ் (Realme P4x), ரியல்மி பி4 பவர் (Realme P4 Power) மற்றும் ரியல்மி பி4 லைட் 4ஜி (Realme P4 Lite 4G) ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளன. மேற்கண்ட ஸ்மார்ட்போன்களின் பழைய விலை என்ன? புதிய விலை என்ன? இதோ விவரங்கள்:

ரியல்மி பி4 மாடலில் இருந்து தொடங்கினால், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.3,000 உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் இதன் விலை ரூ.20,999 இல் இருந்து ரூ.23,999 ஆக உயர்ந்து உள்ளது. ஆக ரியல்மி பி4 ஸ்மார்ட்போன் ஆனது இப்போது வேறுபட்ட விலைப்பிரிவிற்கு வந்துள்ளது

10001mAh பேட்டரி கொண்ட ரியல்மி பி4 பவர் போனின் விலையும் ரூ.2,000 அதிகரித்துள்ளது. முன்பு ரூ 27,999 என விலையிடப்பட்டிருந்த 8ஜிபி + 128ஜிபி மாடல், இப்போது ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி பி4 மாடலை போலவே பி4 பவரின் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே விலை உயர்வை பெற்றுள்ளது

இந்தியாவில் ரியல்மி பி4எக்ஸ் மற்றும் ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. முன்னதாக ரூ.19,999 என விலையிடப்பட்டிருந்த பி4எக்ஸ் மாடல், தற்போது ரூ.21,499 க்கு கிடைக்கிறது. பிP4 லைட் 4ஜி மாடலை பொறுத்தவரை, ரூ.1,000 விலை உயர்வுக்குப் பிறகு, 4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷனின் விலை தற்போது ரூ.11,999 ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
POCO C85 5G POCO C81 and POCO C81x 4G Phone Prices Increased in Indian Market Check Out New Pricings
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X