Home
Mobile

இந்தியாவுக்கு வரும் புதிய போக்கோ 5ஜி போன்.. ஆண்ட்ராய்டு 15 OS.. எந்த மாடல்?

சில மாதங்களுக்கு முன்பு உலக சந்தையில் போக்கோ சி85 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் போக்கோ சி85 5ஜி (POCO C85 5G) எனும் ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது போக்கோ நிறுவனம். அதாவது கூகிள் பிளே கன்சோல் தளத்தில் இந்த போன் காணப்பட்டுள்ளது.

அதேபோல் டெக் அவுட்லுக் அறிக்கையின்படி, இந்த புதிய போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் 2508CPC2BI என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த புதிய போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவுக்கு வரும் புதிய போக்கோ 5ஜி போன்.. ஆண்ட்ராய்டு 15 OS..

போக்கோ சி85 5ஜி அம்சங்கள் (POCO C85 5G specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் வசதியுடன் இந்த புதிய போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திற வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம் , எச்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் போக்கோ சி85 5ஜி போனில் உள்ளன. தற்போது இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளன. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து விவரங்களும் வெளியாகும். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்த போக்கோ எம்7 பிளஸ் 5ஜி (Poco M7 Plus 5G) போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

போக்கோ எம்7 பிளஸ் 5ஜி அம்சங்கள் (Poco M7 Plus 5G specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 6என்எம் 5 எஸ்ஒசி சிப்செட் (Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC) வசதியுடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.

7000mAh பேட்டரி உடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33Wஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3 protection) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் 1 டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போக்கோ போனில் உள்ளது.

ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) ஆதரவுகளுடன் இந்த புதிய போக்கோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

இந்தியாவுக்கு வரும் புதிய போக்கோ 5ஜி போன்.. ஆண்ட்ராய்டு 15 OS..

IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ போன். மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த போனின் எடை 217 கிராம் ஆகும்.

குரோம் சில்வர் (Chrome Silver), அக்வா ப்ளூ (Aqua Blue) மற்றும் கார்பன் பிளாக் (Carbon Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். மேலும் இந்த போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO C85 5G design and specifications leaked on Google Play console: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X