Home
Mobile

அதிருது இந்திய மார்க்கெட்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. கம்மி பட்ஜெட்டில் வரும் புது Poco போன்..

போக்கோ சி85 5ஜி (Poco C85 5G) ஸ்மார்ட்போன் மாடலை வரும் டிசம்பர் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது போக்கோ நிறுவனம். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் நிறங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

மிஸ்டிக் பர்பிள் ( Mystic Purple), ஸ்பிரிங் கிரீன் (Spring Green), பவர் பிளாக் (Power Black) நிறங்களில் இந்த புதிய போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.15,000-க்கு கீழ் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

அதிருது இந்திய மார்க்கெட்.. கம்மி பட்ஜெட்டில் வரும் புது Poco போன்..

போக்கோ சி85 5ஜி அம்சங்கள் (Poco C85 5G Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஒசி (MediaTek Dimensity 6300 SoC)சிப்செட் ஆதரவு இந்த புதிய போக்கோ போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் மேம்பட்ட கேமிங் அம்சங்களும் உள்ளன.

6.9-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 720x1,600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது

போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), எஃப்எம் ரேடியோ (FM Radio) உள்ளிட்ட வசதிகள் இந்த போனில் உள்ளன. மேலும் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிருது இந்திய மார்க்கெட்.. கம்மி பட்ஜெட்டில் வரும் புது Poco போன்..

குறிப்பாக 6000mAh பேட்டரி உடன் போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் இந்த புதிய போக்கோ சி85 5ஜி போன் வெளிவரும். மேலும் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco C85 5G colors and specifications leaked ahead of December 9th launch: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X