Home
Mobile

அடிச்சான் பாரு ஆஃபர்.. 6000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. 50MP கேமரா.. தள்ளுபடி விலைக்கு POCO 5ஜி போன்!

இந்தியாவில் பட்ஜெட் விலைக்கு ஸ்மார்ட்போன்களை போகோ நிறுவனம் கொடுத்து வருகிறது. இதில் 6000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்ட போகோ சி85 5ஜி (POCO C85 5G) ஸ்மார்ட்போன் இப்போது தள்ளுபடி விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போகோ சி85 5ஜி போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 17 சதவீத தள்ளுபடி போக ரூ.11,999 விலைக்கு 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.10,999 பட்ஜெட்டில் இப்போது, போகோ சி85 5ஜி போனை வாங்கி கொள்ளலாம்.

அடிச்சான் பாரு ஆஃபர்.. 6000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. 50MP கேமரா!

போகோ சி85 5ஜி அம்சங்கள் (POCO C85 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த போகோ சி85 5ஜி போன் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) போக 2 வருடங்களுக்கு சாப்ட்வேர் அப்டேட்களை கொடுத்துள்ளது.

மேலும், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் மற்றும் ஹைப்பர்ஓஎஸ் 2.2 (HyperOS 2.2) கிடைத்துள்ளது. 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+), 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 810 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இந்த எல்சிடி டிஸ்பிளேவில் கிடைக்கிறது.

50 எம்பி பிரைமரி கேமரா கொண்ட டூயல் ரியர் செட்டப் கொண்டுள்ளது. செல்பீகள் மற்றும் வீடியோ கால்களை செய்து கொள்ள 8 எம்பி செல்பீ கேமராவை இந்த போகோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கும்படியான 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 10W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது.

ஆகவே, ஹெட்போன், இயர்பட்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். 7.99 மிமீ தடிமன் வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) மற்றும் 3.5 மீமீ ஆடியோ ஜாக்கை இந்த போகோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. IP64 ரேட்டிங்கில் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுத்துள்ளது.

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டியை கொடுத்துள்ளது. மேலும், வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி உள்ளது. குளோனாஸ் (GLONASS) சப்போர்ட் கொடுத்துள்ளது. மிஸ்டிக் பர்பிள் (Mystic Purple) கலரில் வாங்கி கொள்ளலாம்.

மேலும், ஸ்பிரிங் கிரீன் (Spring Green) மற்றும் பவர் பிளாக் (Power Black) ஆகிய கலர்களிலும் ஆர்டர் செய்யலாம். 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் போக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. மேலும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் வாங்க கிடைக்கிறது.

இதில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.1,000 கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம். பிளிப்கார்ட் தளத்தில் இந்த மாடல்கள் வாங்கி கொள்ள கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO C85 5G 6000mAh battery 33W fast charging gets Discounts in Flipkart check price details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X