Home
Mobile

அறிமுகமானது புதிய போக்கோ போன்கள்.. மலிவு விலை.. 6300mAh பேட்டரி.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ சி81எக்ஸ் (POCO C81X) மற்றும் போக்கோ சி81 (POCO C81) போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன்கள் வெளியாகி உள்ளது. இப்போது இந்த புதிய போன்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

போக்கோ சி81எக்ஸ் அம்சங்கள் (POCO C81X specifications): 6.88-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது போக்கோ சி81எக்ஸ் போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்ஸ், (240Hz Touch sampling rate), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.HyperOS 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த போன் இயங்குகிறது.

அறிமுகமானது புதிய போக்கோ போன்கள்.. மலிவு விலை.. எந்த மாடல்?

13எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 8எம்பி செல்பி கேமரா, சைடு-மவுண்டெட் ஃபிங்கப்ரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speaker), எப்எம் ரேடியோ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்களுடன் போக்கோ சி81எக்ஸ் போன் வெளியாகி உள்ளது.

5200எம்ஏஎச் பேட்டரி உடன் போக்கோ சி81எக்ஸ் போன் வெளியாகி உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W வயர்டு சார்ஜிங் மற்றும் 7.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், கலிலியோ, குளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஆக்டோ-கோர் யுனிசாக் டி7250 (Octa-Core UNISOC T7250) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது.

போக்கோ சி81 அம்சங்கள் (POCO C81 specifications) : 6.9-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது போக்கோ சி81எக்ஸ் போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்ஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (240Hz Touch sampling rate), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் இந்த போன் இயங்குகிறது.

13எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 8எம்பி செல்பி கேமரா, சைடு-மவுண்டெட் ஃபிங்கப்ரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speaker), எப்எம் ரேடியோ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்களுடன் போக்கோ சி81 போன் வெளியாகி உள்ளது.

அறிமுகமானது புதிய போக்கோ போன்கள்.. மலிவு விலை.. எந்த மாடல்?

6300mAh பேட்டரி உடன் போக்கோ சி81 போன் வெளியாகி உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W வயர்டு சார்ஜிங் மற்றும் 7.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், கலிலியோ, குளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஆக்டோ-கோர் யுனிசாக் டி7250 (Octa-Core UNISOC T7250) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது.

போக்கோ சி81 மற்றும் போக்கோ சி81எக்ஸ் விலை
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ சி81 போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. அதேபோல் 3ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ சி81எக்ஸ் போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 27-ம் தேதி இந்த போன்கள் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO C81X and C81 launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X