போட்டான் பாருங்க.. ரூ.10,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. புது POCO போன்.. எந்த மாடல்?
போகோ நிறுவனத்தில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடலான போகோ சி81 ப்ரோ (POCO C81 Pro) வெளியாகி இருக்கிறது. ரூ.10,000 பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 120Hz டிஸ்பிளே, போர்ட்ராய்டு கேமரா உள்ளிட்ட பீச்சர்களை கொடுக்கிறது. இந்த போகோ சி81 ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் போகோ சி81 மற்றும் போகோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த வாரம் வெளியாகின. இப்போது, குளோபல் மார்கெட்டில் போகோ சி81 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. ஆகவே, இங்கும் எதிர்பார்க்கலாம் என்பதால், அந்த ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் விலையை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

போகோ சி81 ப்ரோ அம்சங்கள் (POCO C81 Pro Specifications): 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த போகோ சி81 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 650 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 800 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் மற்றும் 254 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 8 பிட் கலர் டெப்த் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) கிடைக்கிறது. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm), மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 4 ஜிபி + 64 ஜிபி மெமரி, 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கிடைக்கிறது.
15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரியை இந்த போகோ சி81 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த பேட்டரியுடன் 8.15 எம்எம் தடிமன் மற்றும் 208 கிராம் எடை கொடுத்துள்ளது. 13 எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் கிடைக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஃபிலிம்கேமரா (FilmCamera), எச்டிஆர் மோட் (HDR Mode) கிடைக்கிறது.
மேலும், டைம்-லேப்ஸ் (Time-lapse), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) கிடைக்கிறது. மேலும், நைட் மோட் (Night Mode) உள்ளிட்ட பீச்சர்களையும் கொடுத்துள்ளது. 8 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த போகோ சி81 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor), ஏஐ பேஸ் அன்லாக் (AI Face Unlock) கிடைக்கிறது.
பிளாக் (Black), கிரீன் (Green) மற்றும் கோல்டு (Gold) ஆகிய கலர்களில் இந்த போகோ சி81 ப்ரோ ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்துள்ளது. 4 ஜிபி + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.9,351ஆகவும், 4 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,296ஆகவும் இருக்கிறது. மேலும், 4 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,185ஆக இருக்கிறது.
இது குளோபல் மார்கெட் விலையாக இருக்கிறது. இந்தியாவில் வெளியானால், இதே பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், முன்னதாக இந்தியாவில் வெளியான போகோ சி81 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆகவும், போகோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications