மிரண்டுபோன மார்க்கெட்.. 50எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி.. வருகிறது புது Poco போன்.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் வரைவில் போக்கோ சி81 ப்ரோ (Poco C81 Pro)ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் தற்போது NBTC தளத்தில் 25128PC17G தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
போக்கோ சி81 ப்ரோ அம்சங்கள் (Poco C81 Pro Specifications): 6.9-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய போக்கோ சி81 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

யுனிசாக் டி7250 சிப்செட் ( Unisoc T7250 chipset) உடன் புதிய போக்கோ சி81 ப்ரோ மாடல் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரை மெமரி உடன் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ சி81 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் போக்கோ சி81 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த போக்கோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகள் போக்கோ சி81 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.
6000எம்ஏஎச் பேட்டரி உடன் போக்கோ சி81 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய போக்கோ போன் வெளிவரும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போக்கோ போன் கம்மி பட்ஜெட்டில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications








