Flipkart-ல் ஆர்டர் பிச்சுக்குது.. ரூ.10000 பட்ஜெட்டில் 2 புது POCO போன்கள் விற்பனை ஸ்டார்ட்.. என்ன மாடல்கள்?
ஷாவ்மீயின் (Xiaomi) துணை பிராண்ட் ஆன போக்கோ (POCO) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் ஆக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ சி81 சீரீஸ் (POCO C81 Series) மாடல்களின் விற்பனை (இன்று முதல் - ஏப்ரல் 27 ஆம் தேதி முதல்) தொடங்கியது.
இந்த சீரீஸின் கீழ் போக்கோ சி81 மற்றும் போக்கோ சி81எக்ஸ் என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஒரே ஆக்டா கோர் யூனிசாக் சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. முக்கிய வேறுபாடாக ஸ்டாண்டர்ட் மாடல் ஆனது 6300mAh பேட்டரியை கொண்டுள்ளது; ஆனால் இரண்டுமே 15W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன.

போக்கோ சி81, போக்கோ சி81எக்ஸ் விலை, விற்பனை, ஆபர்: இந்தியாவில் போக்கோ சி81 ஸ்மார்ட்போனின் விலை, சிங்கிள் 4GB + 64GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்கு ரூ.10,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள போக்கோ சி81எஸ் ஸ்மார்ட்போனின் சிங்கிள் 3GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜை கொண்ட வேரியண்ட் ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் இன்று (ஏப்ரல் 27) முதல் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனையை தொடங்கி உள்ளன. போக்கோ சி81 ஸ்மார்ட்போன் ஆனது Elite Black, Ice Blue மற்றும் Sunset Gold ஆகிய 3 வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது. அதே சமயம், போக்கோ சி81எக்ஸ் மாடலானது Sunset Gold கலர் ஆப்ஷன் இல்லாமல் மீதமுள்ள 2 கலர்களிலும் கிடைக்கிறது.
போக்கோ சி81, போக்கோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள்:
- இரண்டுமே டூயல் சிம் ஸ்மார்ட்போன்கள் ஆகும்
- ஸ்டாண்டர்ட் மாடல் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3-இல் இயங்குகிறது
- எக்ஸ் மாடல் ஆண்ட்ராய்டு 15 உடன் வருகிறது
- முறையே நான்கு மற்றும் இரண்டு வருட ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும்
- இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் ஆறு வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- போக்கோ சி81 ஆனது 6.9-இன்ச் HD+ (720 x 1,600 பிக்சல்கள்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இது 120Hz வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 800 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
- போக்கோ C81எக்ஸ் ஆனது 6.88-இன்ச் HD+ (720x1,640 பிக்சல்கள்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இது 120Hz வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 650 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
- இரண்டு ஸ்மார்ட்போன்களும் TÜV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட், ஃப்ளிக்கர்-ஃப்ரீ மற்றும் சர்க்காடியன்-ஃப்ரெண்ட்லி சான்றிதழ்களுடன் வருகின்றன.
- இரண்டு போன்களும் 1.8GHz வேகத்தில் இயங்கும் ARM மாலி-G57 GPU உடன் இணைக்கப்பட்ட ஆக்டா கோர் யூனிசாக் T7250 சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன.
- LPDDR4x ரேம் மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது
- மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 2TB வரை விரிவாக்கலாம்.
- போக்கோ சி81 மாடலில் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 13-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை கேமராவும் உள்ளது
- போக்கோ C81x மாடலில் சிங்கிள் 13-மெகாபிக்சல் ரியர் கேமரா உள்ளது
- இரண்டு மாடல்களிலும் 8-மெகாபிக்சல் செல்பீ கேமராக்கள் உள்ளது
- இரண்டுமே தூசி மற்றும் நீர் தெறிப்புகளை தாங்கும் திறனுக்காக IP52 மதிப்பீட்டை கொண்டுள்ளன
- போக்கோ சி81 மற்றும் போக்கோ சி81எக்ஸ் ஆகியவைகள் முறையே 6,300mAh மற்றும் 5,200mAh பேட்டரிகளை கொண்டுள்ளன.
- 15W வயர்டு சார்ஜிங் மற்றும் 7.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன
- இரண்டு மாடல்களும் 4G LTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.2, USB டைப்-C போர்ட்கள், GPS, கலிலியோ, குளோனாஸ் மற்றும் QZSS ஆகியவற்றை ஆதரிக்கின்றன
- இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்கள் உள்ளன
- போக்கோ சி81 ஆனது 171.56x79.47x8.15மிமீ அளவும், சுமார் 208g எடையும் கொண்டுள்ளது
- போக்கோ சி81எக்ஸ் ஆனது 171.79x77.8x8.26mm அளவும், சுமார் 193g எடையும் கொண்டுள்ளது


Click it and Unblock the Notifications