Home
Mobile

பொளந்து கட்டிய பிளிப்கார்ட்.. ரூ.7000 பட்ஜெட்ல 5160mAh பேட்டரி.. 50MP கேமரா.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?

போகோ சி75 5ஜி (POCO C75 5G) ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது. 5160mAh பேட்டரி, 50 எம்பி மெயின் கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், IP52 ரேட்டிங் மற்றும் ஸ்னாப்டிராகன் சிப்செட் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த போகோ சி75 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.7,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.500 விலை குறைப்பு போக ரூ.7,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையிலும் ரூ.375 கிரெடிட் கார்டு தள்ளுபடி பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.7,124 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பீச்சர்கள் பட்டையை கிளப்புகின்றன.

பொளந்து கட்டிய பிளிப்கார்ட்.. ரூ.7000 பட்ஜெட்ல 5160mAh பேட்டரி.. 50MP!

போகோ சி75 5ஜி அம்சங்கள் (POCO C75 5G Specifications): இந்த போகோ ஸ்மார்ட்போனில் 6.88 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டிலும் பர்ஃபாமென்ஸ் பக்காவாக இருக்கும்.

ஏனென்றால், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4s Gen 2 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு அட்ரினோ 611 ஜிபியு (Adreno 611 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த போகோ சி75 5ஜி ஸ்மார்ட்போனில் 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் அப்டேட் எதிர்பார்க்க முடியாதுதான். இருப்பினும், இந்த போகோ ஸ்மார்ட்போனுக்கு 2 வருடங்களுக்கு சாப்ட்வேர் அப்டேட் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் கிடைக்கிறது. 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங், நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter), டில்ட் ஷிப்ட் (Tilt Shift), ஃபிலிம் பில்டர்கள் (Film Filters) போன்ற பீச்சர்களை கொடுத்து இருக்கிறது.

இந்த போகோ சி75 5ஜி ஸ்மார்ட்போனில் 5160mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.22 எம்எம் தடிமன் கொடுக்கிறது. அதேபோல 205.39 கிராம் எடை கொடுக்கிறது. பட்ஜெட் விலை மாடல்களில் கிடைக்கும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கிடைக்கிறது. என்சான்டெட் கிரீன் (Enchanted Green), அக்வா ப்ளூ (Aqua Blue) மற்றும் சில்வர் ஸ்டார்டஸ்ட் (Silver Stardust) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO C75 5G With 5160mAh Battery Available at 31 Percent Discount on Flipkart Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X