ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.7999 போதும்.. SONY கேமரா.. 5160mAh பேட்டரி.. 1TB மெமரி.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?
அடிமட்ட பட்ஜெட்டில் சோனி சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5160mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 4 4என்எம் சிப்செட் போன்ற மிரளவிடும் பீச்சர்களுடன் வெளியான போக்கோ சி75 5ஜி (POCO C75 5G) போனின் விற்பனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தொடங்கி இருக்கிறது. இந்த போக்கோ சி75 5ஜி போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரூ.10000 பட்ஜெட்டில் வெளியாகும் போன்களுக்கு இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் வரவேற்பு இருக்கிறது. இதனாலேயே, ரெட்மி, ரியல்மி, போக்கோ, ஐடெல் போன்ற நிறுவனங்கள் வரிசை கட்டிக் கொண்டு புது மாடல்களை களமிறக்கி வருகின்றன. இப்படி போக்கோ நிறுவனத்தின் போக்கோ சி75 5ஜி வெறும் ரூ.8000 பட்ஜெட்டில் நம்ப முடியாத பீச்சர்களுடன் வந்தது.

போக்கோ சி75 5ஜி அம்சங்கள் (POCO C75 5G Specifications): இந்த போக்கோ போனில் பிரீமியம் லுக் கொடுக்கும்படி நேச்சுரல் ராக் டெக்ச்சர் (Natural Rock Texture) கொண்ட பேக் பேனல் வருகிறது. இந்த பேனலுடன் என்சேஞ்ச்டு க்ரீன் (Enchanted Green), சில்வர் ஸ்டார்டஸ்ட் (Silver Stardust) மற்றும் அக்வா ப்ளூ (Aqua Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
பிளாட் டிஸ்பிளே டிசைன் கிடைக்கிறது. 6.88 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+), 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட யுஐ சிஸ்டம் இருக்கிறது.
அதேபோல சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொண்ட 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 (4nm Octa Core Snapdragon 4s Gen 2) எஸ்ஓசி மற்றும் அட்ரினோ 611 ஜிபியு (Adreno 611 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பட்ஜெட்டில் பர்ஃபாமென்ஸ் பற்றிய கவலை இருக்காது. 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விர்ச்சுவல் போக 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வருகிறது. இந்த ரேம் மற்றும் மெமரி மட்டுமே இந்த போனின் குறையாக இருக்கிறது. ஆனால், மற்ற பீச்சர்கள் அப்படியில்லை. சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமரா கொண்ட டூயல் கேமரா சிஸ்டம் (Dual Camera System) வருகிறது. சிலாட்கள் போதுமானதாக இருக்கின்றன.
ஆகவே, கூடுதல் மெமரிக்காக 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சிலாட் மற்றும் டூயல் 4ஜி சிம் சிலாட் (Dual 4G SIM Slot) கிடைக்கிறது. இந்த போக்கோ சி75 5ஜி போனில் 5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. பேட்டரி சிஸ்டமும் பட்ஜெட்டைவிட கூடுதலாக 5160mAh கேப்பாசிட்டி வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ கனெக்டிவிட்டி உள்ளது.
இந்த போக்கோ சி75 5ஜி போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.7,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஆர்டருக்கு கிடைக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜர் கிடைக்கிறது. ரூ.8000 பட்ஜெட்டில் கேமரா, டிசைன், பேட்டரி மற்றும் சிப்செட் பீச்சர்கள் பக்காவாக இருக்க வேண்டுமானால், இதை தேர்ந்தெடுக்கலாம்.


Click it and Unblock the Notifications








