வீட்டுக்கு 2 ஆர்டர்.. கிடைக்காத ரேட்ல 5G போன்.. 5160mAh பேட்டரி.. 50MP கேமரா.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் போகோ சி85 5ஜி (POCO C85 5G) ஸ்மார்ட்போன் களமிறங்க இருப்பதால் முந்தைய மாடலான போகோ சி75 5ஜி (POCO C75 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் 5160mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 120Hz டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் அடிமட்ட விலைக்கு வாங்கி கொள்ளலாம்.
வருகிற டிசம்பர் 9ஆம் தேதி போகோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அதோடு டிசைன் மற்றும் பீச்சர்களும் உறுதியாகி இருக்கின்றன. இந்த பீச்சர்களை பார்ப்பதற்கு முன்பாக போகோ சி75 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 29 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.7,799 பட்ஜெட்டில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. மேலும், குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.375 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,124 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகை, ஈஎம்ஐ சலுகையும் இந்த மாடலுக்கு கிடைக்கிறது.
போகோ சி75 5ஜி அம்சங்கள் (POCO C75 5G Specifications): ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4s Gen 2 4nm) சிப்செட் வருகிறது. சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மற்றும் அட்ரினோ 611 ஜிபியு (Adreno 611 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. 2 வருட ஓஎஸ் அப்டேட் உள்ளது.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்கொண்ட 6.88 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் பெரிய டிஸ்பிளே கொண்ட மாடலாகவும் இந்த போகோ சி75 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5160mAh பேட்டரி கொண்டுள்ளது. 8.22 எம்எம் தடிமன் மற்றும் 205.39 கிராம் எடை வருகிறது. 1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் சோனி (Sony) சென்சார் கொண்ட 50 எம்பி பிரைமரி கேமரா கிடைக்கிறது. மேலும், செகண்டரி லென்ஸ் மற்றும் செல்பீகளுக்காக 5 மெகாபிக்சல் ப்ரன்ட் கேமரா கிடைக்கிறது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) உள்ளது. மார்பிள் பேக் பேனல் டிசைனில் என்சான்டெட் கிரீன் (Enchanted Green), அக்வா ப்ளூ (Aqua Blue) மற்றும் சில்வர் ஸ்டார்டஸ்ட் (Silver Stardust) ஆகிய மூன்று கலர்களில் வாங்க கிடைக்கிறது.
போகோ சி85 5ஜி அம்சங்கள் (POCO C85 5G Specifications): 6.9 இன்ச் எல்சிடி டிஸ்பிளே வருகிறது. இதில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்க இருக்கிறது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உள்ளது.
மேலும், 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கிடைக்க இருக்கிறது. 6000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த போகோ சி85 5ஜி இருக்கிறது. பர்பிள் கலரில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளது. ரூ.12,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் பீச்சர்கள் உறுதி செய்யப்பட்ட இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








