Home
Mobile

அதிருது இந்திய மார்க்கெட்.. ரூ7,999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. வருகிறது புதிய POCO 5ஜி போன்..

போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ சி75 5ஜி (POCO C75 5G) ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 17-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்புடன் கம்மி விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போக்கோ சி75 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

போக்கோ சி75 5ஜி அம்சங்கள் (POCO C75 5G specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 எஸ்ஒஎசி (Qualcomm Snapdragon 4s Gen 2 SoC) சிப்செட் உடன் போக்கோ சி75 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதி இந்த போனில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிருது இந்திய மார்க்கெட்.. வருகிறது புதிய POCO 5ஜி போன்..

50எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ சி75 5ஜி ஸ்மார்ட்போன். அதவும் இந்த போனில் சோனி கேமரா சென்சார் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த போக்கோ சி75 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு டூயல் ஸ்பீக்க்ர்களை கொண்டுள்ளது இந்த போன். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் போக்கோ சி75 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே எடன் இந்த போக்கோ சி75 5ஜி போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக 5000mAh பேட்டரி உடன் போக்கோ சி75 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிருது இந்திய மார்க்கெட்.. வருகிறது புதிய POCO 5ஜி போன்..

5ஜி, 4ஜி எல்டிஇ,டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.2, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது போக்கோ சி75 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங் (IP52 dust and water-resistant rating) உடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, போக்கோ சி75 5ஜி போன் ரூ.7,999 விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco C75 5G price and specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X