Home
Mobile

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. 50எம்பி கேமரா.. 5160mAh பேட்டரி.. ஆஃபரில் Poco 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனத்தின் போக்கோ சி75 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த போன் 50எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த போனில் உள்ளன. இப்போது இந்த போக்கோ போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் போக்கோ சி75 5ஜி போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.550 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் Poco 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ சி75 5ஜி அம்சங்கள் (POCO C75 5G Specifications): 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 (4nm Octa Core Snapdragon 4s Gen 2) எஸ்ஓசி சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. பின்பு அட்ரினோ 611 ஜிபியு (Adreno 611 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது. எனவே இந்த போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.

சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

6.88 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். இந்த டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி உடன் போக்கோ சி75 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமரா கொண்ட டூயல் கேமரா (Dual Camera System) அமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த போக்கோ சி75 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது.

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் Poco 5ஜி போன்.. எந்த மாடல்?

என்சேஞ்ச்டு க்ரீன் (Enchanted Green), சில்வர் ஸ்டார்டஸ்ட் (Silver Stardust) மற்றும் அக்வா ப்ளூ (Aqua Blue) ஆகிய
நிறங்களில் இந்த போக்கோ சி75 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கிறது.

5160mAh பேட்டரி உடன் போக்கோ சி75 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. 5ஜி எஸ்ஏ கனெக்டிவிட்டி ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco C75 5G phone available at discounted price on Flipkart: Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X