பொசுக்குனு பட்ஜெட்! ரூ.6499 போதும்.. 5200mAh பேட்டரி.. 32MP கேமரா.. 15W சார்ஜிங்.. IP52 ரேட்டிங்.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் மாடலான போக்கோ சி71 (POCO C71) போனானது யுனிசோக் சிப்செட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 32 எம்பி கேமரா, 5200mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. டிசைனில் பிரீமியம் காட்டி இருப்பதால், பட்ஜெட் பிரியர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இந்த போக்கோ எப்போது விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது? பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்கள் இருக்கிறதா? முழு விவரங்களையும் பார்க்கலாம்.
டூயல் டோன் லுக் கொடுக்கும்படி ஃஸ்பில்ட் கிரிட் டிசைன் (Spilt Grid Design) கொடுக்கிறது. கோல்டு-லைக் ஃபிரேம் கொண்ட கேமரா பம்ப் இருக்கிறது. இந்த டிசைனில் டெசர்ட் கோல்டு (Desert Gold), பவர் பிளாக் (Power Black) மற்றும் கூல் ப்ளூ (Cool Blue) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. டிஸ்பிளே, கேமரா, ஓஎஸ், பேட்டரி பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

போக்கோ சி71 அம்சங்கள் (POCO C71 Specifications): இந்த போக்கோ போனில் 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது. 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டில் கிடைப்பதால், ஆக்டா கோட் யுனிசோக் டி250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கிறது. இந்த போக்கோ சி71 போனில் 2 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட்டுடன் இரண்டு ரேம் வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட பேஸ் வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது.
மேலும், 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மற்றொரு வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. எஸ்டி கார்டு கிடைப்பதால், டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மட்டுமல்லாமல், எஸ்டி சிலாட் (SD Slot) கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.88 (1640 x 720 pixels) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.
வெட் டச் டெக்னாலஜி (Wet Touch Technology) சப்போர்ட் கொண்ட இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் கிடைக்கும் பெரிய டிஸ்பிளேவாக இது இருக்கிறது. இந்த டிஸ்பிளேவை போலவே மற்றொரு பீச்சராக 5200mAh பேட்டரி மற்றும் 15W சார்ஜிங் கிடைக்கிறது.
கேமராவில் பெரியதாக எதிர்பார்க்க முடியவில்லை. ஆகவே, 32 எம்பி மெயின் மற்றும் செகண்டரி லென்ஸ் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இந்த போக்கோ போனில் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கனெக்டிவிட்டி உள்ளது. டைப்-சி போர்ட், 3.5 எம்எம் ஜாக் மற்றும் சைடு-பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் உள்ளது.
இந்த போக்கோ சி71 போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.6,499ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.7,499ஆக இருக்கிறது. ஏர்டெல் யூசர்களுக்கு ரூ.500 டிஸ்கவுண்ட் போக ரூ.5999 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. ஏப்ரல் 8ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. பிளிப்கார்ட் (Flipkart) விற்பனையில் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications