பொளக்குது விற்பனை.. ரூ.6499-க்கு 5200mAh பேட்டரி.. 1TB மெமரி.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 32MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் அடிமட்ட பட்ஜெட்டில் அறிமுகமாகி ஒட்டுமொத்த பட்ஜெட் பிரியர்களையும் தட்டித்தூக்கிய போக்கோ சி71 (POCO C71) போனின் விற்பனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தொடங்கிவிட்டது. 5200mAh பேட்டரி தொடங்கி ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் வரையில் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பீச்சர்களை பேக் செய்துள்ளது. இந்த செக்மெண்ட்டில் பெரிய டிஸ்பிளேவுடன் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த போக்கோ போனின் விலை, விற்பனை மற்றும் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
போக்கோ சி71 இந்திய விற்பனை (POCO C71 India Sale): இந்த போக்கோ போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.6,499ஆக இருக்கிறது. 6 ஜிபி ரேம் (6 ஜிபி டர்போ ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.7,499ஆக இருக்கிறது. இதே விலையில் பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

பவர் பிளாக் (Power Black), டெசர்ட் கோல்டு (Desert Gold) மற்றும் கூல் ப்ளூ (Cool Blue) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த போக்கோ சி71 போனின் ஏர்டெல்-லாக்டு வேரியண்ட்டின் விற்பனை ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்குகிறது. அப்போது, ஆர்டர் செய்தால், ரூ.500 டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம்.
போக்கோ சி71 அம்சங்கள் (POCO C71 Specifications): இந்த போக்கோ போனில் 6.88 (1640 x 720 pixels) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் வெட் டச் டெக்னாலஜி (Wet Touch Technology), பஞ்ச்-ஹோல் நாட்ச் (Punch Hole Notch) டிசைன், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.
மேலும், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோட் 12என்எம் யுனிசோக் டி250 (Octa Core 12nm UNISOC T7250) சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கிறது.

1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி சிலாட், டூயல் நானோ சிம் சிலாட், டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது. 32 எம்பி ஏஐ டூயல் கேமரா ( AI Dual Camera) கிடைக்கிறது. இந்த கேமராவில் ஏஐ போர்ட்ராய்டு மோட் (AI Portrait Mode), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter), ஃபிலிம் ஃபில்டர் (Film Filters) மற்றும் நைட் மோட் (Night Mode) கிடைக்கிறது.
இந்த கேமரா மூலம் 1080p ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். ஏஐ பியூட்டிஃபை (AI Beautify), ஃபால்ம் ஷட்டர் (Palm Shutter) போன்ற பீச்சர்கள் மற்றும் மெயின் கேமராவை போல 1080p வீடியோ ரெக்கார்டிங்குடன் 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 15W டைப்-சி சார்ஜிங் கொண்ட 5200mAh லித்தியம்-அயன் பேட்டரி கிடைக்கிறது.
மேலும், சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor), ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கிடைக்கிறது. IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. பிரீமியம் லுக் கொடுக்க ஃஸ்பில்ட் கிரிட் டிசைனை பேக் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








