Home
Mobile

ஏப்.4 பெரிய சம்பவம்.. ரூ.7000 பட்ஜெட்ல 5200mAh பேட்டரி.. 12GB ரேம்.. 2TB மெமரி.. 32MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் இருக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களை ஒட்டுமொத்தமாக தட்டித் தூக்கும்படியான பட்ஜெட்டில் போக்கோ சி71 (POCO C71) போன் களமிறங்க இருக்கிறது. 5200mAh பேட்டரி, 12 ஜிபி ரேம், 2 டிபி மெமரி சப்போர்ட், 32 எம்பி கேமரா போன்ற பீச்சர்களுடன் வெளியீட்டு தேதியும் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போக்கோ சி71 போனின் முழு பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

போக்கோ இந்தியா நிறுவனம் இந்த அடிமட்ட பட்ஜெட் மாடலை வரும் ஏப்ரல் 4ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவதையும் உறுதி செய்து இருக்கிறது. இதுபோக இந்த போக்கோ சி71 போனின் டிஸ்பிளே, டிசைன், பேட்டரி, கேமரா, சிப்செட் ஓஎஸ், கலர் மற்றும் பட்ஜெட் செக்மெண்ட் விவரங்களையும் உறுதி செய்துள்ளது.

ஏப்.4 பெரிய சம்பவம்.. ரூ.7000 பட்ஜெட்ல 5200mAh பேட்டரி.. 12GB ரேம்!

போக்கோ சி71 அம்சங்கள் (POCO C71 Specifications): இந்த போக்கோ போனில் 6.88 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பெரிய டிஸ்பிளவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ரூ.7000 பட்ஜெட்டில் பெரிய டிஸ்பிளே கொண்ட மாடலாக இந்த போக்கோ போன் கிடைக்கப் போகிறது. வாட்டர் டிராப் நாட்ஜ் கிடைக்கிறது.

அதேபோல வெட் டச் டிஸ்பிளே (Wet Touch Display) மாடலாக இருப்பதால், வாட்டர் டிராப் கன்ட்ரோல் கொடுக்கும். இதற்கு ஏற்ப IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஃபிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்க டூயல்-டோனில் ஸ்பில்ட்-கிரிட் டிசைன் (Split-grid Design) கிடைக்கிறது. கோல்டன் பினிஷிங் ஃபிரேம் கொண்ட கேமரா பம்ப் கிடைக்கிறது.

இந்த டிசைனில் பவர் பிளாக் (Power Black), கூல் ப்ளூ (Cool Blue) மற்றும் டெசர்ட் கோல்டு (Desert Gold) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. 32 எம்பி டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. நைட்போட்டோகிராபி மற்றும் ஃபிலிம் ஃபில்டர்கள் கிடைக்கின்றன. இந்த போக்கோ சி71 போனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

ஏப்.4 பெரிய சம்பவம்.. ரூ.7000 பட்ஜெட்ல 5200mAh பேட்டரி.. 12GB ரேம்!

6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்க இருக்கிறது. 2 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொடுக்கிறது. ஆக்டா கோர் (Octa Core) சிப்செட் வருகிறது. ஆகவே, 12 ஜிபி ரேம் மற்றும் ஆக்டா கோர் சிப்செட் அவுட்புட் கிடைப்பதால், பட்ஜெட்டைவிட கூடுதல் பர்ஃபாமென்ஸ் இந்த போக்கோ சி71 போனில் எதிர்பார்க்கலாம்.

இந்த ரூ.7000 பட்ஜெட்டில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 ஜெனரேஷன் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5200mAh பேட்டரியை இந்த போக்கோ சி71 போன் கொடுக்கிறது. ஆகவே, இந்த செக்மெண்ட்டில் பேக்கப் அதிகமாகவே எதிர்பார்க்கலாம்.

மேலும், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டூயல் பேண்ட் வை-பை (Dual-band Wi-Fi) சப்போர்ட் கிடைக்கிறது. 1 வாரண்டி பெற்று கொள்ளலாம். ரூ.7000 பட்ஜெட்டில் பக்கா டிஸ்பிளே, பேட்டரி மற்றும் ரேம் பீச்சர்களை கொண்ட போன் வேண்டுமானால், இந்த போக்கோவை தேர்ந்தெடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO C71 With 32MP Camera 5200mAh Battery To Launch April 4 Sale From Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X