பாக்கெட்ல போடும் பட்ஜெட்.. ரூ.10,000 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
போகோ பிரியர்களை வெயிட்டிங் மோடில் வைக்கும் விதமாக வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில் 16ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 50 எம்பி டிரிபிள் கேமரா, 5000mAh பேட்டரி போன்ற பக்கா அம்சங்களுடன் போகோ சி65 (POCO C65) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
போகோ சி65 அம்சங்கள் (POCO C65 Specifications): இந்த போகோ போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் கொண்டுள்ளது. அதோடு ஆர்ம் மாலி ஜி52 ஜிபியு (ARM Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போனில் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த போகோ மாடலில் 50 எம்பி அல்ட்ரா கிளியர் மெயின் கேமரா வருகிறது.
அதோடு 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), மேக்ரோ மோட் (Macro Mode) மற்றும் ஃபிலிம் ஃபில்டர் (Film Filter) போன்ற மோட்கள் வருகின்றன. 8 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. இந்த கேமராவிலும் ஃபிலிம் பில்டர், எச்டிஆர், போர்ட்ராய்டு மற்றும் டைம்-லேப்ஸ் போன்ற மோட்கள் வருகின்றன.
இந்த போனில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. மேலும், 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஏஐ பேஸ் அன்லாக் (AI Face Unlock) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போகோ மாடலில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. இந்த பேட்டரி 23 மணி நேரம் ஆன்லைன் வீடியோ பிளேபேக், 114 மணி நேரம் மியூசிக் பிளேபேக் மற்றும் 31 மணி நேரம் காலிங் பேக்கப் கொடுக்க கூடியது.
ஸ்டான்ட்பையில் 25 மணி நேரம் பயன்படுத்தலாம். இந்த போன் 192 கிராம் எடைக் கொண்டுள்ளது. இந்த போனில் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (Headphone Jack) வருகிறது. இந்த போனின் கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, டூயல் 4ஜி, வை-பை 802, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன. பிளாக் (Black), ப்ளூ (Blue), பர்பிள் (Purple) ஆகிய மூன்று கலர்கள் கொண்டிருக்கிறது.

இந்த போகோ போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,725ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,390ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் குளோபல் வேரியண்ட் நேற்று (நவம்பர் 5) அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஒருசில வாரங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்தியாவிலும் இதன் விலை ரூ.10,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications