பட்ஜெட் விலை.. ஆர்ப்பரிக்கும் அம்சங்கள்.. HD+ டிஸ்பிளே.. 1TB மெமரி.. 50MP AI கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
பட்ஜெட் செக்மென்ட்டில் தரமான அம்சங்களை வழங்கி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை கலக்கவரும் சாதனம் தான் போக்கோ 65 (POCO C65). இது அல்ட்ரா லார்ஜ் HD+ டிஸ்பிளே, 50MP AI கேமரா, 8GB RAM, 1TB மெமரி, 5000mah பேட்டரியுடன் வருகிறது.
போக்கோ (POCO) பிராண்ட் வரும் டிசம்பர் 15ம் தேதி 12 மணி அளவில் அதன் புதிய பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் (Budget Segment Smartphone) மாடலான போக்கோ C65 (POCO C65) சாதனத்தை அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வருகைக்கு முன்பே இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தெரியாதவர்களுக்கு உலக சந்தையில் (Global market), இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 2023 இல் அறிமுகம் செய்யப்பட்டது.

போக்கோ C65 (POCO C65):
உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட அதே சிறப்பம்சங்களுடன் போக்கோ C65 (POCO C65) இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தின் வழியாக வாங்க கிடைக்கும் என்பதை நிறுவனத்தின் தி பிக் டீல் (The Big Deal) விளம்பர போஸ்டர் உறுதி செய்துள்ளது. சரி, இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்ன என்பதை இப்போது முழுவதுமாக பார்க்கலாம்.
போக்கோ C65 சிறப்பம்சங்கள் (POCO C65 Specifications):
இந்த புதிய போக்கோ C65 ஸ்மார்ட்போன் சாதனம் 6.47" இன்ச் அல்ட்ரா லார்ஜ் எச்டி+ (ultra-large HD+) டிஸ்பிளே உடன் வருகிறது. இந்த டிஸ்பிளே 90Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) ஆதரவை கொண்டுள்ளது. பட்ஜெட் விலையில் இது மிகவும் துல்லியமான கிரிஸ்டல் கிளியர் டிஸ்பிளேவை (crystal clear display) வழங்குகிறது.

இந்த சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85 SoC) சிப்செட் உடன் வருகிறது. இந்த சாதனம் 8ஜிபி ரேம் (8GB of RAM) உடன் 16ஜிபி வரையிலான எக்ஸ்பெண்டபிள் ரேம் (16GB expandable RAM) அம்சத்தை ஆதரிக்கிறது. இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், 256ஜிபி இன்டெர்னல் மெமரி (256GB inbuilt storage) மற்றும் 1TB வரையிலான எக்ஸ்பெண்டபிள் மெமரியை கொண்டுள்ளது.
இதன் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 50 மெகாபிக்ஸல் கொண்ட ஏஐ ட்ரிபிள் கேமரா (50-megapixel AI triple camera) அம்சத்தை கொண்டுள்ளது. இது மிகவும் சிறப்பான கேமரா அம்சத்தை பட்ஜெட் விலையில் வழங்குகிறது. இது மிகவும் சிறப்பான புகைப்படங்களை படம்பிடிக்க பல இன்பில்ட் மோட்களை கொண்டுள்ளது. இந்த சாதனம் 5000mah பேட்டரியை பேக் செய்கிறது.
இது 18W பாஸ்ட் சார்ஜிங் (18W Fast Charging) அம்சத்துடன் வருகிறது. இது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் (6GB RAM + 128GB storage) உடன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி (8GB RAM + 256GB) உடன் வருகிறது. இதே வேரியண்ட் மாடல் தான் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பதனால், இவையே இந்திய சந்தையிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவை ரூ.10,000 விலைக்குள் ஒரு மாடலும் ரூ.10,000 விலைக்கு மேல் ஒரு மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








