பட்ஜெட் விலையில் பக்கா அம்சங்கள்.. 50MP கேமரா, 256GB மெமரி.. இந்தியாவுக்கு வரும் போக்கோ போன்.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் பட்ஜெட் விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் போக்கோ நிறுவனம் விரைவில் போக்கோ சி65 எனும் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த போக்கோ சி65 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த போனின் நிறங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது பர்பிள் நிறத்தில் இந்த போக்கோ சி65 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வேறு நிறங்களிலும் இந்த போன் அறிமுகம் செய்யப்படலாம். குறிப்பாக வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே, எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட டூயல் ரியர் கேமரா மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
குறிப்பாக போக்கோ சி65 ஸ்மார்ட்போன் ஆனது 6.74-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், கொரில்லா கிளாஸ் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ ஸ்மார்ட்போன். பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போக்கோ சி65 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ சி65 ஸ்மார்ட்போன். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இந்த போக்கோ சி65 ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். மேலும் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போக்கோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவுடன் இந்த போக்கோ சி65 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த அசத்தலான போக்கோ சி65 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போக்கோ சி65 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் போக்கோ சி65 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.10,000-க்கு கீழ் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Photo courtesy: 91mobiles


Click it and Unblock the Notifications








